பதிரனா மிரட்டல் பவுலிங்.. போராடிய ரோகித் சதம் வீண்.. சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி

0
701
CSK

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதன் சொந்த மைதானத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரராக வந்த ரகானே 5 (8), ரச்சின் ரவீந்தரா 21 (16) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். 200 ரன்கள் அடிக்க நிலையில் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி உருவானது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் ருத்வராஜ் மற்றும் சிவம் துபே இருவரும் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 90 ரன்கள் பார்ட்னர் அமைத்தார்கள். ருதுராஜ் 40 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த டேரில் மிட்சல் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி நான்கு பந்துகளுக்கு களம் இறங்கிய தோனி ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து, மொத்தம் நான்கு பந்தில் 20 ரன்கள் எடுத்தார். சிவம் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 66 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா மூன்று ஓவர்களில் 43 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

பத்திரனா தந்த வித்தியாசம்

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஜோடி 7.1 ஓவரில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. இசான் கிஷான் 15 பந்துகளில் 23 ரன்கள், அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் ரன்கள் ஏதும் இல்லாமல் பதிரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்ந்து 60ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். திலக் வர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பதிரனா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2(6), டிம் டேவிட் 13 (5), ரொமாரியோ செப்பர்ட் 1(2) தொடர்ந்து வெளியேறினார்கள். கடைசி வரை நினைத்து நின்று விளையாடிய ரோஹித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 105 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பதிரனா நான்கு ஓவர்களில் 28 ரன் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை ரோகித் சர்மா 18 முறை ஆட்டம் இழக்காமல் இருந்த பொழுதும் அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் மட்டுமே அவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.