இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல.. இதனாலதான் தோத்துட்டோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
1017
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மோதிய போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்தது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, ஹென்றி கிளாசன் 80, எய்டன் மார்க்ரம் 42 ரன் என எல்லோரும் அதிரடியில் மிரட்டினார்கள். ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரோகித் சர்மா 26, இசான் கிஷான் 34, நமன் திர் 30, திலக் வர்மா 64, ஹர்திக் பாண்டியா 24, டிம் டேவிட் 42, ரோமாரியோ செப்பர்டு 15 ரன்கள் என இறுதிவரை விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அப்படி போட்டியை இழக்காமல், இந்த முறை நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா “டாஸ் வென்ற பொழுது இப்படி நடக்கும் என்று உண்மையில் நினைக்கவில்லை. 277 என்ற ரன்கள் அடிக்கப்பட்டிருக்கும்பொழுது, நீங்கள் மோசமாக பந்து வீசினாலும் சரி, ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடி இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதேபோல் அவர்களுடைய பந்துவீச்சாளர்களும் நன்றாக இருந்தார்கள். மொத்தம் ஐநூறு ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : மொத்தம் 523/8 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை.. விடாமல் போராடிய மும்பை.. ஹைதராபாத் முதல் வெற்றி

நாங்கள் இந்த போட்டியில் சில இடங்களில் சில வேலைகளை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் கொஞ்சம் அனுபவம் இல்லாத பந்துவீச்சு வரிசையை வைத்திருக்கிறோம். எனவே நாங்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வோம். நாங்கள் இந்த போட்டியில் இருந்து எங்களுடைய தவறுகளை திருத்திக் கொண்டு வெளி வருவதற்கு கொஞ்சம் நேரம் தேவை. இளம் பந்துவீச்சாளர் மாபாகா மிக நன்றாக இருந்தார். அவர் அவருடைய திறமையை நம்பி ஆதரித்தார்” என்று கூறியிருக்கிறார்.