ரோகித் பாய்க்காகவே இந்த ஸ்பெஷல் பிளான் பண்ணினேன்.. உழைப்புக்கு பலன் கிடைச்சிருக்கு – வருண் சக்கரவர்த்தி பேட்டி

0
93
Varun

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் ஸ்பின்னர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆட்டநாயகன் விருது பெற்ற வரும் சக்கரவர்த்தி சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு 21 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். காயத்தால் நிறைய போட்டிகளில் விளையாடாத நிதிஷ் ராணா 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில், கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவர் பிளேவில் விக்கெட் இழப்பில்லாமல் 59 ரன்கள் எடுத்தது. அடுத்து ஹிசான் கிஷான் விக்கெட்டை 6.5 ஓவரில் 65 ரன்களுக்கு சுனில் நரைன் பந்துவீச்சில் இழந்தது. இதற்கு அடுத்து கொல்கத்தா ஸ்பின்னர்கள் போட்டியை ஒட்டுமொத்தமாக தங்கள் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள்.

இன்றைய போட்டியில் வரும் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் இரண்டு விக்கெட்டுகள், சுனில் நரைன் மூன்று ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். மொத்தம் இவர்கள் இருவரும் ஏழு ஓவர்கள் பந்துவீசி 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்கள். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே பதினாறு ஓவர்களுக்கு எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது “ரோகித் பாய் விக்கெட்டை நான் ஒரு முறை கூட வீழ்த்தியது கிடையாது. இந்த முறை அவருக்கான என்னுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. அவரைப் பந்தில் லைனுக்கு நேராக அடிக்க வைக்கக் கூடாது, அவரை அக்ராஸ் அடுக்க வைக்க வேண்டும் என திட்டம் தீட்டினேன். அதன்படியே நடந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: நாங்க விளையாடிய கிரிக்கெட் எப்படிப்பட்டது தெரியுமா?.. இந்த மேட்ச்ல தோக்கவும் இதான் காரணம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

நானும் நரேனும் திட்டங்கள் ரீதியாக ஒரே மாதிரியானவர்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நேரானவர்கள். நாங்கள் பொதுவாக திட்டங்கள் குறித்து இருவரும் பேசிக் கொள்வோம். இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த சாதகமாக தட்டையாக இருந்தது. மேலும் நான் எப்பொழுதும் பந்து வீசியது போலத்தான் பேசுகிறேன். அதற்கான பலன்கள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.