நாங்க ஜெயிப்போம்னு இந்த விஷயத்தால நல்லா தெரியும்.. சூர்யாவுக்கு பிளான் சிம்பிளானது – ரசல் பேட்டி

0
118
Russell

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை தங்களது சொந்த மைதானத்தில் வென்று, அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. கொல்கத்தா அணியின் நேற்றைய வெற்றியில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். இதுகுறித்து பந்துவீச்சில் கலக்கிய ஆன்ட்ரே ரசல் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு மூன்றாவது இடத்தில் வந்த வெங்கடேஷ் ஐயர் 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். மேலும் தொடரின் ஆரம்பத்தில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த நிதிஷ் ராணா அணிக்கு திரும்பி 23 பந்தில் 33 வருடங்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 16 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தது. மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 65 ரன்கள் வந்தது. இஷான் கிஷான் 22 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். எனவே மும்பை அணி எளிதில் வெற்றி பெறும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கிருந்து சுனில் நரைன் 1, வருண் சக்கரவர்த்தி 2, ஆன்ட்ரே ரசல் 2, ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி மொத்தமாக போட்டியை கொல்கத்தா பக்கம் திருப்பி வெற்றி பெற்றார்கள். மும்பை 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த போட்டியில் ஆன்ட்ரே ரசல் பேட்டிங்கில் 14 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்தார். மேலும் பந்து வீச்சில் மூன்று ஓவர்களுக்கு 34 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதில் சூரியகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் விக்கெட்டுகள் அடக்கம். அடுத்தடுத்து இந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இலக்கை நோக்கி மும்பை வேகமாக நகர்வதை தடுத்துவிட்டார்.

போட்டிக் குறித்து பேசி இருக்கும் ஆன்ட்ரே ரசல் “நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். ஆடுகளம் கொஞ்சம் ஒட்டும் தன்மையுடன் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிந்தோம். எனவே நாங்கள் எடுத்த ரன்கள் வெற்றி பெறுவதற்கு போதும் என்பதை உணர்ந்தோம். அவர்கள் நல்ல ஒரு தொடக்கத்தை பெற்றாலும் அவர்களை நாங்கள் பின்னால் தள்ளினோம். எங்கள் பவுலர்கள் எங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் பாய்க்காகவே இந்த ஸ்பெஷல் பிளான் பண்ணினேன்.. உழைப்புக்கு பலன் கிடைச்சிருக்கு – வருண் சக்கரவர்த்தி பேட்டி

சூரியகுமார் யாதவுக்கு எளிமையாக பந்தை வைக்க நினைத்தேன். மைதானத்தில் பெரிய பக்கத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். அவர் 360 டிகிரி வீரர். மேலும் இது நம்முடைய நம்பிக்கையைப் பற்றியது என்று நினைக்கிறேன். வயதாகும்போதும் உங்களுக்கு அனுபவம் கிடைக்கிறது நீங்கள் நன்றாக விளையாட முடியும். நான் உடல் தகுதியில் உழைத்தேன். என் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.