சும்மா ஐபிஎல்-ல குறை சொல்லாதிங்க.. பேட்ஸ்மேன்களை பாராட்டுங்க – இந்திய வீரர்கள் மீது கைப் விமர்சனம்

0
30
Kaif

நடப்பு ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி முதல் பந்தில் இருந்து தாக்கி விளையாடும் தைரியத்தை ஒரு அணியின் மொத்த பேட்ஸ்மேன்களுக்கும் கொடுக்கிறது.இதனால் இந்த விதி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு எதிராக முகமது கைஃப் பேசி இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இம்பேக்ட் பிளேயர் விதியால் கிடைத்திருக்கும் தைரியம், பேட்டிங் செய்ய சாதகமாக கொடுக்கப்படும் தட்டையான ஆடுகளங்கள், ஸ்விங் இல்லாத பந்து என எல்லாமே பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் வீரர்கள் ரோஹித் சர்மா, முகமது சிராஜ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் வெளிப்படையாகவே தங்களுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள். இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்கிவிட வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். இதனால் ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படும் என ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கூட்டத்தில் பேசும்பொழுது, அந்த அணியின் இயக்குனர் இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேட்டிங் மற்றும் பவுலிங் இடையே சமநிலையை உருவாக்குவது மிகவும் அவசியம் என்றும், ஐபிஎல் தொடரில் எதிர்காலத்தில் இது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு எதிரான கருத்தை முன்வைத்து பேசிய முகமது கைஃப் கூறும் பொழுது “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு நாம் முதலில் பேட்ஸ்மேன்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் புதுமையான ஷாட்கள் விளையாடி தங்களது விக்கெட்டுகளை பணயம் வைக்கிறார்கள். ரிவர்ஸ் ஸ்கூப் மற்றும் லாப் ஷாட் விளையாடுவது எளிதானது கிடையாது. தற்போது பேட்ஸ்மேன்கள் பின் விளைவுகள் பற்றி கவலைப்படுவது இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : அகர்கர் கோலிதான் டி20 உலககோப்பை வாங்கி தர போறாரா? ஆஸ்திரேலியா இப்படி செய்யாது – மேத்யூ ஹைடன் பேட்டி

தற்போது அனைத்து பேச்சுகளும் தட்டையான ஆடுகளங்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான அனுதாபத்தை உருவாக்கக் கூடியதாகவே அமைந்து வருகிறது. ஆனால் இது தவறானது. ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் புதிய யுத்திகளை கையாண்டு, புதிய விஷயங்களை முயற்சி செய்து பந்துவீச்சாளர்களை விட ஒரு படி மேலே இருந்து வருகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.