0 ரன் 7 விக்கெட்.. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இந்தோனேசியா வீராங்கனை உலக சாதனை

0
1156

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் மங்கோலியா மற்றும் இந்தோனேசியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தோனேசியா வீராங்கனை ரோமாலியா மிக அபாரமாக பந்து வீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

மங்கோலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இந்தோனேசியா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐந்தாவது போட்டியிலும் இந்தோனேசிய மகளிர் அணி வெற்றிபெறும் முனைப்பில் களம் இறங்கியது.

- Advertisement -

இதன்படி டாஸ் வென்ற இந்தோனேசிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்தோனேசிய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நி புட்டு ஆயு நந்தா சாகாரினி 44 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ருடன் 61 ரன்கள் குவித்து சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருக்கு பக்கபலமாக ஹில்வா னூர் 19 ரன்களும், ரோமானியா 13 ரன்களும், நீ முர்டியரி 13 ரன்களும் குவித்தனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை மங்கோலியா அணி தரப்பில் மென் பயார் என்குல் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக மங்கோலிய மகளிர் அணி பந்துவீச்சில் கூடுதலாக 37 ரன்களை விட்டுக் கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தோனேசிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 120 பந்துகளில் 152 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மங்கோலிய கிரிக்கெட் அணி. ஆனால் அவர்கள் 24 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பார்கள் என்று அறிந்திருக்க மாட்டார்கள். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மங்கோலிய மகளிர் அணியின் என்க்போல்ட் கலியூனா நான்கு ரன்களும், பாட் ஜர்கல் இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு மங்கோலி அணியின் கேப்டன் சென்சுரேன் அதிகபட்சமாக ஏழு ரன்கள் குவித்தார்.

ரோமாலியா உலக சாதனை

அதற்குப் பிறகு ரோமாரியாவின் அபாரமான பந்துவீச்சினால் மங்கோலிய பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் ஏழு பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்கள். சிறப்பாக பந்து வீசிய ரோமாலியா 3.2 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ரோமானிய படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 2009 ஐபிஎல் பைனல்.. உத்தப்பா கிட்ட கெஞ்சினேன்.. ஆர்சிபி அப்பவே சாம்பியனாகி இருக்கும் – அனில் கும்ப்ளே பேச்சு

இதன் மூலம் மங்கோலிய கிரிக்கெட் அணி 24 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதற்கு முன்னர் ஜிம்பாப்வே அணி வீரர் கெயித் டெபங்வா 2006 ஆம் ஆண்டு வெஸ்டர்ன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் தர போட்டியில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதேபோல 1966 ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஜேனட் பர்கர் ஆல்மா அணிக்கு எதிராக ஒரு ரன் விட்டுக் கொடுத்து எழு விக்கெட்டுகளும், பிறகு 2022ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி வீராங்கனை எஸ்தர், ஈகில்ஸ் அணிக்கு எதிராக ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -