நான்சென்ஸ் மாதிரி பண்ணாதிங்க.. நான் ருதுராஜ் தோனியை பத்தி என்ன சொன்னேன்? – கொதித்து எழுந்த அம்பதி ராயுடு

0
2860
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் ருதுராஜ் தலைமையில் விளையாடி இருக்கும் சிஎஸ்கே அணி நான்கில் வென்று நான்கில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் ருதுராஜ் தோனி பற்றி தான் கூறாத கருத்தை பரப்பியதற்காக அம்பதி ராயுடு கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டன் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடி சரி பாதி வெற்றி தோல்வியை பெற்று இருக்கிறது. இதில் மூன்று போட்டிகளில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் வெளி மைதானத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளை லக்னோ அணிக்கு எதிராக விளையாடி, இரண்டு போட்டிகளையுமே சிஎஸ்கே அணி தோற்றது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து 210 ரன்கள் எடுத்து, அணி தோல்வி அடைந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

குறிப்பிட்ட அந்த போட்டியில் ருதுராஜ் ஸ்பின்னர்களையும், தீபக் சாஹரையும் பயன்படுத்திய விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் வெற்றி பெற்றால் தோனியையும், தோல்வி அடைத்தால் ருதுராஜையும் அம்பதி ராயுடு காரணமாக காட்டுகிறார் என்றும், அதை நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம் செய்திருக்கிறார் என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் நிறையபரவி வந்தது.

பொதுவாக வெற்றி பெறும் பொழுது களத்தில் தோனி கொடுத்த ஐடியாக்களால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது எனவும், தோல்வியடையும் பொழுது ருதுராஜ் கேப்டன்சி சரியில்லாமல் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது எனவும், அம்பதி ராயுடு பேசி வருவதாக, அதை நவ்ஜோத் சிங் கண்டித்து விட்டதாக வந்த செய்திகளுக்கு சமூக வலைதளத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் அம்பதி ராயுடு கூறவும் இல்லை, அதை நவ்ஜோத் சிங் சித்து கண்டிக்கவும் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கில்லுக்கு இந்த சாதாரண கணக்கே புரியல.. நிச்சயம் நைட் அவர் தூங்க மாட்டாரு – முகமது கைஃப் விமர்சனம்

இதுகுறித்து ட்விட்டர் தளத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கும் அம்பதி ராயுடு அதில் “குறிப்பிட்ட அந்த நாளில் நான் கிரிக்கெட் வர்ணனை செய்யவே செல்லவில்லை. அந்த நாளில் நான் என்னுடைய பண்ணையில் மாம்பழங்கள் பறித்துக் கொண்டிருந்தேன். இப்படியான தவறான செய்திகளை பரப்புபவர்கள், கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து சரியானதை எழுத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.