2009 ஐபிஎல் பைனல்.. உத்தப்பா கிட்ட கெஞ்சினேன்.. ஆர்சிபி அப்பவே சாம்பியனாகி இருக்கும் – அனில் கும்ப்ளே பேச்சு

0
407
Kumble

ஐபிஎல் தொடரில் பல நட்சத்திர வீரர்களை உள்ளடக்கி விளையாடி இருந்த போதிலும், 16 வருடங்களில் ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. ஆனால் அவர்கள் மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். இதில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து அனில் கும்ப்ளே தற்பொழுது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 2009 2011 என ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இரண்டு முறை ஐபிஎல் பைனலுக்கு தகுதி பெற்ற அணியாகவே ஆர்சிபி அணி ஆரம்பத்தில் இருந்தது. அதற்குப் பிறகு தான் அந்த அணியுடைய செயல்பாடு குறைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 144 ரன்கள் இலக்கை அடிக்க முடியாமல், ஒன்பது விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆர்சிபி அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஐபிஎல் சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது.

அப்போது கடைசி ஓவருக்கு 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. முதல் பந்தில் அனில் கும்ப்ளே ஒரு ரன் எடுத்து அந்த பக்கம் சென்று விட்டார். ஆர்பி சிங்கின் அந்த ஓவரில் ராபின் உத்தப்பா பின்புறம் ஸ்கூப் ஷாட் அடிப்பதற்காக அடுத்த இரண்டு பந்துகளை வீணடித்தார். மீண்டும் அதே முறையிலேயே விளையாட சென்றார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை இழந்தது.

இதுகுறித்து அனில் கும்ப்ளே தற்பொழுது பேசும் பொழுது ” எனக்கு அந்த போட்டியில் நாங்கள் தவறவிட்ட எல்லா வாய்ப்புகளும் நினைவில் இருக்கிறது. வீசப்பட்ட நோபால், பிரவீன் குமார் வீசிய ஐந்து வைடுகள், இப்படி இப்படி நாங்கள் ஏமாந்து போன எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறது. இப்போது ராபின் உத்தப்பாவை பார்க்கும் பொழுதும், அந்த சிக்ஸரை அடித்திருக்க வேண்டும் என்று நான் கூறுவேன். குறைந்தபட்சம் எனக்காவது ஸ்ட்ரைக் கொடுத்து இருக்கலாம் என்றும் கூறுவேன்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. ரிஷப் பண்ட் இந்த இடத்திற்கு சரிவர மாட்டாரு.. அவர் டெஸ்ட் பிளேயர் – சைமன் டால் பேட்டி

ஆர்பிசிங் அந்தக் கடைசி ஓவரில் நான் ராபின் உத்தப்பாவிடம் ‘ராபி உங்களை ஆர்பி.சிங் ஸ்கூப் ஆட விடப்போவது இல்லை. அவர் பந்துகளை லெந்தில் வீசப் போகிறார். எனவே ஸ்லாக் ஆடப் பாருங்கள்’என்று சொன்னேன். ஆனால் அவர் தொடர்ந்து மூன்றாவது பந்தையும் ஸ்கூப் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது அவரிடம் எனக்காக ஸ்ட்ரைக் கொடுங்கள் நானாவது ஸ்லாக் செய்கிறேன் ஏதாவது நடக்கட்டும் என்று கெஞ்சினேன். இப்பொழுது அவரை சந்திக்கும்போது கூட நீங்கள் அந்த சிக்ஸரை அடித்திருக்க வேண்டும் என்று கூறுவேன். ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத பேச்சுகள் எழும் பொழுதெல்லாம், நாங்கள் தவறவிட்ட இந்த வாய்ப்பு என்னுடைய ஞாபகத்தில் வரும்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.