பும்ரா கிடையாது.. நான் முன்னவே சொன்னேன்.. இவர்தான் உலகின் சிறந்த பவுலர்.. சூரியகுமார் யாதவ் பேட்டி

0
6229

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில் இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக் கொள்கின்றன.

ஆன்ட்டிகுவாவில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றது மட்டுமில்லாமல், சூப்பர் 8 சுற்றிலும் ஆப்கானிஸ்தான் அணியை முதல் போட்டியில் வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

வங்கதேச அணியும் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளதால், இந்திய அணிக்கு நிச்சயமாக கடுமையான சவாலாக விளங்கும். இந்திய அணியைப் பொறுத்தவரை ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவாக விளங்குகிறது. பேட்டிங்கில் தொடக்கம் மட்டும் இன்னும் இந்திய அணிக்கு சரியாக கிளிக் ஆகவில்லை. ஆனால் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாடிக் கொண்டிருக்கும் சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடி வருகிறார்.

தொடக்கத்தில் சில போட்டியில் தடுமாறினாலும் அதன் பிறகு தனது பழைய பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்து போட்டியின் வேகத்தை மாற்றினார். அவர் குவித்த ரன்களால்தான் இந்திய அணி 182 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் ரஷீத் கான் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரது பந்துவீச்சில் விளையாடுவது கடினம் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து சூரியகுமார் யாதவ் விரிவாக கூறும்பொழுது “நான் இதை முன்பே கூறியிருக்கிறேன், திரும்பவும் கூட சொல்கிறேன் ரஷீத் கான் காற்றில் பந்து வீசும் போது அவரது பந்தை எதிர்கொள்வது மிகவும் சிரமம். அதனால் அவருக்கு எதிராக என்ன மாதிரியான ஷாட்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பதில் தெளிவாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர். நீங்கள் அவரை ஆதிக்கம் செலுத்த முடிவெடுத்தால் அவருக்கு முன்னால் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் ரஷித் கான் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆப்கானிஸ்தான அணியை பொறுத்தவரை அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஒரே பந்துவீச்சாளரும் அவர் மட்டுமே ஆகும்.

இதையும் படிங்க:பும்ரா வெஸ்ட் இண்டீஸ்க்கு விளையாடனும்.. பங்களாதேஷ் இத செய்யாதிங்க புதைச்சிடுவாரு – லாரா எச்சரிக்கை

இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இந்தச் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வருகிற திங்கட்கிழமை மோத உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருப்பதால் இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமையில் உள்ளது.