டபுள் போனஸ்.. தல தோனியின் 43வது பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சிறப்பு ஏற்பாடு

0
216
Dhoni

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனான மகேந்திர சிங் தோனியின் 43வது பிறந்தநாள் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வருகின்றது. இதற்கு ஒட்டுமொத்த தோனியின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை தோனியின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டின் மாற்றங்களுக்கு வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் தலைமையில் மகேந்திர சிங் தோனி அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் வெளியேறி வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக அதே ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடருக்கு சச்சின் ஆலோசனையின் பேரில் இளம் இந்திய அணி அனுப்பப்பட்டது. அதற்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கு மேல் நடந்த எல்லா விஷயங்களும் தற்பொழுது இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் வரலாறாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையில் 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்த வெற்றி 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேரானந்தத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை ஒட்டி 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை ஞாபகப்படுத்தும் விதமாக “எம்எஸ் தோனி அண்ட்டோல்ட் ஸ்டோரி” என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வந்த தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அடுத்தடுத்து சாதித்து காட்டிய சிஎஸ்கே.. இது கனவு நனவாகும் தருணம்.. துஷார் தேஷ்பாண்டே சிலிர்ப்பான பேச்சு

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மிகவும் முக்கியமானது. அவருடைய வாழ்க்கையே ஒரு சினிமா போல அமைந்த காரணத்தினால், அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்பொழுது ஜூலை 5 முதல் 11ம் தேதி வரையில் மீண்டும் ரீதியில் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது டி20 உலகக்கோப்பை வெற்றியுடன், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியையும் நினைவு கூர்ந்து கொண்டாட டபுள் போனஸ் ஆக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த செய்தி அமைந்திருக்கிறது.

- Advertisement -