இன்றைய டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று பங்களாதேஷ் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் பேட்ஸ்மேன் பிரையன் லாரா முக்கியமான எச்சரிக்கை ஒன்றைச் செய்திருக்கிறார்.
சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷ் அணி தங்களது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் பங்களாதேஷ் அணி அரை இறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிடும்.
இன்று வாழ்வா சாவா போட்டியில் விளையாட இருக்கும் பங்களாதேஷ் அணி இந்திய அணியை வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பிரையன் லாரா முக்கியமான எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார். அந்த எச்சரிக்கை மீறினால் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மறு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இது குறித்து பிரையன் லாரா கூறும்பொழுது “பும்ரா வெளிப்படையாக ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவரைப் போன்று பந்துவீச்சாளர்கள் ஒரு சிலரே. நான் இதை இரண்டு நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டேன். அவர் வெஸ்ட் இண்டிஸில் தங்க விரும்பினால், அவருக்கு உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்யலாம். பின்பு சில காலம் கழித்து அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விளையாடவும் செய்யலாம். ஆனால் இதை நகைச்சுவைக்காகச் சொல்கிறேன்.
மற்ற அணியின் வீரர்கள், பேட்ஸ்மேன்கள், அணி மேனேஜர்கள் எல்லோரும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் யாருமே போட்டியில் பும்ராவுக்கு எதிராக செல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. இந்தியாவுக்கு எதிராக பங்களாதேஷ் வெற்றி பெற விரும்பினால், பும்ராவை எதிர்த்து எதையும் செய்ய வேண்டாம். மீறி அப்படி செய்தால் அடக்கம் செய்யப்படுவார்கள்.
இதையும் படிங்க : அட விராட் கோலிய விடுங்க.. சூப்பர் பிளேயர் இவர பத்தி இனிமே பேசுங்க – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி
அவர் மிகவும் சிறந்தவர் என்பது உங்களுக்கு தெரியும். அவர் உங்களது கஷ்ட காலத்திற்கு தூண்டக்கூடியவர். அம்ப்ரோஸ், மெக்ராத், வாசிம் அக்கரம் போன்ற கிரேட் பிளேயர்களின் வரிசையில் அவரும் ஒருவர். நீங்கள் அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்.






