தோனி ஸ்டைல்.. குல்தீபுக்கு மாஸ் ஐடியா தந்த துருவ் ஜுரல்.. அடுத்த பந்து விக்கெட்.. சூடு பிடிக்கும் களம்

0
328
Jurel

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் தரம்சாலா மைதானத்தில் இந்திய அணி இன்று விளையாடி வருகிறது.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் இழக்க, இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்திய ஏகப்பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பந்து வீச்சுக்கு வந்த கோல்டன் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்றைய நாளில் விழுந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். அவர் விக்கெட்டை எடுத்த மூன்று பந்துகளும் மிகச் சிறப்பான பந்துகளாக விழுந்து இருக்கின்றன.

மிகக்குறிப்பாக ஜாக் கிரௌலிக்கு குல்தீப் வீசிய பந்து அவருடைய கனவு பந்தாக அமைந்தது. அவரது பந்துவீச்சில் தொடர்ந்து தப்பித்துக் கொண்டிருந்த அவரை இறுதியில் வெளியேற்றி இந்திய அணிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் முதல் செசனில் ஒரு விக்கெட் விழுந்ததும் அடுத்து துணை கேப்டன் ஒல்லி போப் விளையாட வந்தார். ஆரம்பத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுமை காட்டினாலும் அடுத்து அவர்களது பாணியில் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார்கள்.

- Advertisement -

ஒல்லி போப் கிரீஸில் இருந்து இறங்கி விளையாட முயற்சி செய்தார். இதை மிகச் சரியாக கணித்திருந்த இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் இதை உடனே குல்தீப் யாதவுக்கு இந்தியில் கூறி, அதற்கேற்றபடி லைன் அண்ட் லென்த்தை மாற்ற சொன்னார்.

இதற்கு அடுத்து உடனே குல்தீப் யாதவ் வழக்கமான பந்தை வீசாமல், பந்து வெளியில் செல்லும்படி கூக்ளியாக வீசினார். ஒல்லி போப் துருவ் ஜுரல் சொன்னபடியே இறங்கி வந்து விளையாட முயற்சி செய்து பந்தை தவறவிட்டார். ஐடியா கொடுத்ததுடன் பந்தை சரியாகவும் பிடித்து துருவ் ஜுரல் அசத்தலாக ஸ்டெம்பிங் செய்து அசத்தினார்.

இதையும் படிங்க : சர்ப்ராஸ் கான் பேச்சை கேட்காத ரோகித்.. குல்தீப்பால் வந்த பிரச்சனை.. என்ன நடந்தது

தோனி இருக்கும் வரை தங்களுக்கு சிறந்த யோசனையை கூறி களத்தில் சிறப்பாக வழி நடத்தினார் என்றும், தற்போது அதை தாங்கள் இழந்திருப்பதாகவும் குல்தீப் மற்றும் சாகல் ஏற்கனவே கூறியிருப்பார்கள். தற்போது தோனி விட்ட இடத்தில் ஜுரல் ஆரம்பித்திருக்கிறார். அடுத்த தோனியாக இவர் வருவார் என்று பல முன்னால் வீரர்கள் கூறியதற்கு ஏற்றபடி சம்பவங்கள் நடக்க ஆரம்பித்து இருக்கிறது.