29 பந்தில் சதம் அடித்த வீரரை தூக்க திட்டம் போடும் டெல்லி.. சிஎஸ்கேவுக்கு ஏமாற்றம்

0
238
Fraser

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டதாக எல்லோராலும் கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு அணியாக வீரர்கள் எல்லோரும் சேர்ந்து செயல்பட்ட பொழுது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

மேலும் 2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தவறவிட, அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பாக நிறைய வீரர்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் கழட்டிவிட்டது. அவர்களுக்கு மிடில் வரிசை மிகவும் வீக்காக இருந்த காரணத்தினாலும், மேலும் ரிஷப் பண்ட் விளையாடுவது குறித்தான சந்தேகத்தினாலும், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவைப்பட்டார்கள்.

இதற்காக மிடில் வரிசைக்கு இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கை 4 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். இதற்கு அடுத்து வெளிநாட்டு விக்கெட் கீப்பராக வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஷாய் ஹோப் மற்றும் இந்திய விக்கெட் கீப்பராக இளம் வீரர் குமார் குஸ்கரா ஆகியோரை வாங்கினார்கள்.

இதன் மூலம் ரிஷப் பண்ட் விளையாடாவிட்டால் அவர்களால் வெளிநாட்டு அல்லது இந்திய விக்கெட் கீப்பரை பயன்படுத்தி விளையாட முடியும். மேலும் இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களுமே மிடில் வரிசையில் விளையாட கூடியவர்கள். மேலும் ஹாரி புரூக்கையும் மிடில் வரிசையில் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஒருவேளை ஓபனர்கள் சொதப்பினால் அந்த இடத்திலும் இவரை விளையாட வைக்க முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் தான் ஹாரி புரூக் அவசர வீட்டு சூழ்நிலை காரணமாக இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடாமல் கிளம்பிச் சென்றார். எனவே அவர் தற்பொழுது நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய இளம் துவக்க வீரர் ஜாக் பிராசர் மெக்கர்க்கை வாங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவர் கடந்த ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டாஸ் மேனியா அணிக்கு எதிராக 29 பந்தில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் கிரீஸ் கெயில் 30 பந்தில் சதம் அடித்திருந்த உலகச் சாதனையை தகர்த்தார்.

இதையும் படிங்க : “டி20ல கோலியை வேண்டாம்னு நினைக்கிறவங்க தெரு கிரிக்கெட் விளையாடுறவங்க” – பாகிஸ்தான் முகமது இர்பான் பேச்சு

மேலும் நடப்பு ஆண்டில் இவருக்கு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் போட்டியையும் டி20 போட்டி போலவே விளையாடினார். கிடைத்த அந்த ஒரு வாய்ப்பில் 18 பந்துகளில் 41 ரன்கள் அதிரடியாக குவித்து மிரள வைத்தார். எனவே இவரை வாங்க டெல்லி திட்டமிடுகிறது. அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வே இடத்தில் வாங்குவதற்கு சரியான வீரர்களான இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்டை கொல்கத்தா வாங்கிவிட்டது. தற்போது இவரையும் டெல்லி தூக்க திட்டமிடுவது ஏமாற்றமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது.