நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 வீரர்களின் பட்டியல்

0
226
Jeet Raval

கிரிக்கெட் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாட்டில் பிறந்த வீரர்களும் அந்த நாட்களுக்கு விளையாடுவார்கள் என்ற வரைமுறை தற்போது வரை இருந்ததில்லை. சிறுவயதில் தங்களுடைய நாட்டில் பிறந்து தங்களுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் சிலர் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே தங்களது நாட்டுக்காக சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் வெகு சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் வேறு துணையைத் தேடிச் சென்று அதில் ஐக்கியமாகி விடுவார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே எப்படியாவது கிரிக்கெட் விளையாட விட வேண்டும் என்று முடிவு செய்து பிற நாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமைப் பெற்றுக்கொண்டு அந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவார்கள். இம்மாதிரி நியூசிலாந்து அணிக்காக பல்வேறு வீரர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சென்று அந்த நாட்டுக்காக விளையாடி இருக்கின்றனர்.

- Advertisement -

அப்படி நமது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அல்லது இந்தியாவில் பிறந்தவர்களோ நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக பங்குபெற்று விளையாட்டுகளைப் பற்றி பார்ப்போம்

இஸ் சோதி

இவர் இந்தியாவில் லூதியானா என்ற இடத்தில் பிறந்தவர். இவர் ஒரு லிப்ஸ் பின்னர் பவுலர் ஆவார் இளம் வயதில் நியூசிலாந்து நாட்டுக்குச் சென்று அங்கேயே குடியுரிமை பெற்றுக் கொண்ட வீரர் இவர். இவரது கிரிக்கெட் திறமையை கண்ட நியூசிலாந்து அணி நிர்வாகம் இவரை 19 வயதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்தது. ஆனால் களமிறங்கிய வேளையில் சரியாக விளையாடாத காரணத்தினால் அவருக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் மீண்டும் நியூஸிலாந்து எனக்காக டி20 போட்டிகள் மற்றும் ஒருசில ஒருநாள் போட்டியில் களமிறங்கி விளையாடினார். டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை மேல் தற்போது வரை அவர் எடுத்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை டி20 தொடரில் நிச்சயமாக நியூஸிலாந்து அனைத்து அவர் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

தீபக் பட்டேல்

தீபக் ஒரு ஆப் ஸ்பின்னர் பவுலர் ஆவார். அவர் கென்யாவில் பிறந்து அதற்குப் பின்னர் தனது பத்து வயதில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார். பின்னர் அங்கே கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அங்கே கிரிக்கெட் விளையாடினார்.

தீபக் கென்யாவில் பிறந்து இருந்தாலும் அவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். நாட்டுக்காக அதிக போட்டிகளில் விளையாடி தனது ஆசையை தீர்த்துக் கொண்டார். குறிப்பாக 1992 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் அவர் பௌலிங் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோனி ஹீரா

இவரும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் நியூசிலாந்து நாட்டில் பிறந்து அங்கேயே நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாட, அதன் காரணமாக இவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட நியூஸிலாந்து நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் சர்வதேச அளவில் இவர் சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தமாக 14 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீதன் பட்டேல்

இவரும் ஒரு ஆப் ஸ்பின்னர் பவுலர் ஆவார். இவரது பெற்றோர்கள் நியூசிலாந்து நாட்டில் பிறந்து இருந்தாலும் இவர்கள் அடிப்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். நியூசிலாந்து நாட்டில் பிறந்த ஜீதன் இந்த நாட்டிற்காக மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடினார்.

இருபத்தி நான்கு டெஸ்ட் போட்டிகள் 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டியில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடினார் அவர் 2017 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் ஸ்பின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீத் ராவல்

இவர் குஜராத்தில் பிறந்தார். இடது கை பேட்ஸ்மேனான இவர் இந்திய அணிக்காக பல உள்ளூர் போட்டிகளில் பார்த்தீவ் பட்டேல் உடன் இணைந்து விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் 16வது வயதில் நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அங்கே குடியுரிமை பெற்று அந்த நாட்டிற்காக விளையாட தொடங்கினார்.

அங்கே சென்று டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 24 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடிய தற்போது வரை 1143 ரன்கள் குவித்திருக்கிறார் டெஸ்ட் போட்டிகளில் அவரது அறையைச் 30 ஆகும். அவரை விட சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் அணியில் இருந்த காரணத்தினால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.