இரண்டு நாட்டிற்காக விளையாடிய 6 கிரிக்கெட் வீரர்கள்

0
60646
Luke Ronchi
Photo: Getty Images

இந்த உலகில் கிரிக்கெட் விளையாட்டு என்பது மிகவும் பிரபலமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் டி20 வடிவிலான போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். எரத்தாள அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று ஒரு கிரிக்கெட் அணி வைத்துள்ளது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளும் திறமையான வீரர்களை இந்தக் கிரிக்கெட் உலகிற்குத் தந்துள்ளது.

அதிக ஆற்றல் கொண்ட சிலக் கிரிக்கெட் வீரர்கள், தான் விளையாடும் நாட்டில் அவர்களால் தங்களுடைய முழு திறனையும் இந்த உலகிற்குத் தெரிவிக்க முடியவில்லை என்று சிலசமயங்களில் எண்ணுவர். அதற்குச் சிறந்த உதாரணமாக இருப்பவர் முன்னாள் ஹாங் காங் கேப்டன் அனுஷுமன் ரத். இவர் இந்தியாவில் நடத்தப்படும் ரஞ்சித் தொடரில் விதர்பா அணியினுல் நுழைய விரும்பினார். சில வீரர்கள், தாங்கள் விளையாடும் அணியில் தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் மற்றொரு நாட்டிற்குச் சென்று அந்த அணிக்காகவும் விளையாடுவர்.

- Advertisement -

இரு நாட்டிற்காக விளையாடிய 6 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

6. லூக் ரோஞ்சி – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிாந்து

லூக் ரோஞ்சி ஐ.பி.எலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். இவர் ஆஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டுத் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலிய அணிக்காக லூக் ரோஞ்சி 3 டி20களில் பங்களித்து உள்ளார். 

- Advertisement -

பின்னர், தன் பூர்வீகம் நியூசிலாந்து என்று கருதி அங்குச் சென்று விட்டார். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஐசிசி 2015 உலகக் கோப்பையிலும் இவர் விளையாடியுள்ளார். 29 டி20களில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய பின் தனது ஓய்வை அறிவித்தார்.

5. ரால்ப் வான் டெர் மெர்வே – தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து

வான் டெர் மெர்வே 2009 தென்னாபிரிக்கா அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர். அணியில் முக்கியச் சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார் . ஐ.பி.எலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் அற்புதமாக விளையாடி உள்ளார். 

தென்னாபிரிக்கா அணியில் தொடர்ந்து சரியாக விளையாடாதக் காரணத்தினால், இவரால் அந்த அணியில் நீடிக்க முடியவில்லை. அதன்பிறகு நெதர்லாந்து நாட்டிற்குச் சென்று டச் மக்களுள் ஒருவராக இணைந்து 2015ல் அந்த அணிக்காக களம் இறங்கினார். இந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இன்றும் நெதர்லாந்து அணிக்காக விளையாடுகிறார்.

4. பாய்ட் ரங்கின் – அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைப் போன்ற அண்டை நாடுகளாகும். உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனும் அயர்லாந்து கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக இருந்தார். 

ஆனால் , அயர்லாந்து அணிக்காக அவர் ஒரு டி20 போட்டியில் கூடக் கலந்து கொள்ளவில்லை என்பது குிப்பிடத்தக்கதாகும். அயர்லாந்து அணியில் அவருடன் விளையாடிய சக வீரர் பாய்ட் ரங்கின், அந்த அணிக்காக 2012ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். பிறகு , இங்கிலாந்து அணியில் சேர விருப்பப்பட்டு அங்குச் சென்றுவிட்டார். துரதிஷ்டவசமாக அவருக்கு இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் மீண்டும் அயர்லாந்து அணிக்கே திரும்பிவிட்டார்.

3. சேவியர் மார்ஷல் – மேற்குஇந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா

சமீபத்தில் ஹெய்டன் வால்ஷ் என்பவர் அமெரிக்காவிற்கும் விண்டீஸுக்கும் கிரிக்கெட் விளையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு முன் இந்தச் சாதனையை நிகழ்த்தியது முன்னாள் விண்டீஸ் பேட்ஸ்மேன் சேவியர் மார்ஷல் .இவர் மேற்குஇந்திய தீவுகள் அணியில் அனைவரும் வியக்கும் வகையில் அற்புதமாகச் செயல்பட்டார். இருப்பினும் அவரது ஒழுக்கமின்மைக் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது மார்ஷல் அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

2. இசதுல்லா தவ்லட்சாய்  – ஆப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனி

ஆப்கான் நட்சத்திரம் இசதுல்லா தவ்லேட்ஸாய் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாதச் சாதனையை நிகழ்த்தி உள்ளார். அது என்னவென்றால் , ஆசிய மற்றும் ஐரோப்பியா ஆகிய இரண்டு நாடுகளுக்காகவும் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் இவர் தான்.

ஆப்கானிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டார். இருப்பினும் அவரது குடும்பச் சூழ்நிலையால் ஜெர்மனி நாட்டிற்குத் தள்ளப்பட்டார். அந்த நாட்டில் குடியேறிய பிறகு மீண்டும் தன் கிரிக்கெட் வாழ்க்கையை ஜெர்மனி அணியில் இருந்து தொடங்கினார். 

1. டர்க் நண்ணேஸ் – ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து

டர்க் நண்ணேஸ் என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு கண்டத்திற்கு விளையாடிய மற்றொரு வீரர் ஆவார். இவர் ஐ.பி.எலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். வேகப்பந்து வீசும் ஆற்றல் கொண்ட இவர் 2009இல் நெதர்லாந்து அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.

ஆஸ்திரேலிய அணி இவரின் துல்லியமான பந்துவீச்சைப் பார்த்து வியந்து போனது. அதனால் 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 அணியில் இடம்பெற்றார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக, இவர் 2010இல் இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.