இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்.. இம்பேக்ட் பிளேயர் விதி தொடருமா?.. அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜெய் ஷா

0
942
Jai

தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரையில் மட்டுமே இருந்தது. டி20 உலகக் கோப்பை நடைபெறுகின்ற காரணத்தினால் நவம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பல விஷயங்கள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா பேசியிருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் திரும்ப இந்திய டி20 கிரிக்கெட் அழைத்து வந்தது. இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலத்தையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிகரித்தது.

- Advertisement -

தற்போது ராகுல் டிராவிட் பயிற்சி காலம் நவம்பர் மாதம் வரையில் நீடிக்கிறது. நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்கிறது. இதற்கு முன்பாக புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாகவும், இதற்கு தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும்பொழுது “ராகுல் டிராவிட் பதவி காலம் ஜூன் மாதம் வரை மட்டுமே. எனவே அவர் விண்ணப்பிக்க விரும்பினால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மேலும் புதிய பயிற்சியாளர் இந்தியரா அல்லது வெளிநாட்டவரா என்பது குறித்து எங்களால் முடிவு செய்ய முடியாது. அதை சிஏசி முடிவு செய்யும். மேலும் நாங்கள் உலகளாவிய அமைப்பாக இருந்து வருகிறோம்.

இம்பேக்ட் பிளேயர் விதியை ஒரு சோதனை முறையாகவே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக இரண்டு புதிய இந்திய வீரர்களுக்கு ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இது குறித்து தாங்கள் எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமையாளர்கள் உடன் விவாதிப்போம். ஆனால் இதுவரையில் இந்த விதிக்கு எதிராக எங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நான் பேட்ஸ்மேன்தான்.. ஆனாலும் இதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்.. இது மாறனும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒவ்வொரு பயிற்சியாளரை நியமிக்க முடிவு கிடையாது. ஏனென்றால் எல்லா வடிவத்திலும் விளையாடக்கூடிய ரிஷப் பண்ட், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். இதேபோல் ஹர்திக் பாண்டியா உள்நாட்டு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.