இந்திய அணிக்கு இப்ப இருக்க பிரச்சனையே வேற.. நாங்க இதத்தான் சரி பண்ணனும் – ரோகித் சர்மா பேட்டி

0
222
Rohit

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது. மேலும் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்.

இந்திய அணி தங்களது முதல் சுற்றில் நான்கு போட்டிகளையும் அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் ஃபுளோரிடா மைதானங்களில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு அமெரிக்கா சூழ்நிலையில் விளையாடி பெரிய பழக்கம் கிடையாது.

- Advertisement -

மேலும் இந்தியா தனது முதல் மூன்று போட்டிகளை விளையாட இருக்கும் நியூயார்க் நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானம் புதிய மைதானமாகும். மேலும் இங்கு இன்னும் எந்த போட்டிகளும் நடக்கவில்லை. எனவே அமெரிக்க சூழ்நிலை வழங்கப்படாதது போலவே மைதானம் மற்றும் ஆடுகளமும் இந்திய அணிக்கு பழக்கம் இல்லாத ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா “இதற்கு முன்பு நாங்கள் இங்கு விளையாடவில்லை என்கின்ற காரணத்தினால் சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகளை புரிந்து அதை பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்வோம். ஜூன் 5ஆம் தேதி நாங்கள் இங்கு முதல் போட்டியை விளையாடுகிறோம். நாங்கள் அங்கிருந்து மைதானம் மற்றும் ஆடுகளம் ஆகியவற்றின் தன்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த புதிய மைதானம் மிகவும் அழகாக இருக்கிறது. இது ஒரு திறந்த வெளி மைதானம் ஆகும். நாங்கள் இங்கு வந்து எங்களுடைய முதல் ஆட்டத்தை விளையாடுவதற்காக தற்பொழுது காத்துக் கொண்டிருக்க முடியவில்லை. சீக்கிரத்தில் விளையாட ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : 257 ரன்.. பூரன் சிக்ஸர் மழை.. டி20 உ.கோ பயிற்சி போட்டியில் ஆஸியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

தற்போது நியூயார்க்கில் உள்ளவர்கள் கூட போட்டியை வந்து பார்க்க ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை கோப்பை இன்று முதல் முறையாக நடக்கிறது. எனவே பல அணிகளின் ரசிகர்களும் இங்கு வந்து போட்டிகளை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். வீரர்களும் விளையாட ஆரம்பிப்பதற்காக காத்திருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.