இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் இலக்கு வைத்து, 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து இலக்கை துரத்தும் பொழுது அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை நகர்த்திக் கொண்டிருந்தார். மேலும் அவர் அவுட் ஆவதற்கான எந்த வாய்ப்பையும் தராமல் சிறப்பாக விளையாடினார்.
இவருடன் ஜானி பேர்ஸ்டோ இணைந்ததும் இங்கிலாந்து மிக வசதியாக 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரண்களை கடப்பதற்கு தயாராக விளையாடிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் மதிய உணவு இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும் பொழுது குல்தீப் பந்துவீச்சில் ஜாக் கிரவுலி பந்தை காலில் வாங்கினார். இந்திய வீரர்கள் அம்பயரிடம் முறையிட அவர் அவுட் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ரோகித் சர்மா மூன்றாவது நடுவரிடம் செல்ல, டி ஆர் எஸ் முறையில் பந்து ஸ்டெம்ப்பை அதிகம் தாக்குவது தெரிந்தது.இதை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு கிரிக்கெட் வர்ணனையிலிருந்து அவர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென்ஸ் ஸ்டோக்ஸ் ஆட்டம் முடிந்த பிறகு இந்த டிஆர்எஸ் முடிவு தவறாக இருப்பதாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் விக்கெட் விழுந்ததற்குப் பிறகு இங்கிலாந்து அணி அடுத்து அதே ரன்னில் பேர்ஸ்டோ விக்கெட்டை இழந்தது. இங்கிருந்து இங்கிலாந்து தோல்வி உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “பந்தயம் கட்டறேன்.. ரோகித்-பும்ரா ஜோ ரூட்டை விடமாட்டார்கள்” – இங்கிலாந்து நாசர் ஹுசைன் பேச்சு
தற்பொழுது குல்திப் போன்ற சைனா மேன் பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் இது குறித்து கூறும் பொழுது ” இது குல்தீப் வீசிய பேக் ஸ்பின் என்று நான் உணர்ந்தேன். பந்து நேராகச் சென்று லெக் ஸ்டெம்பை அடிப்பதாகவும் உணர்ந்தேன். ஃப்ரண்ட் புட்டில் ஆட வேண்டிய பந்துக்கு பேக் புட்டில் ஆடியது கிரவுலி தவறு. மற்றபடி அது அவுட்தான்” என்று இந்திய அணிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.