விராட் கோலி இமயமலை துறவி மாதிரி.. அவர் 15வது கியரில் இருக்கிறார்.. இதுதான் காரணம் – முகமது கைஃப் பேச்சு

0
189
Kaif

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகச் சிறந்த பேட்டிங் பார்மில் இருந்து வருகிறார். அவரே அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை நீண்ட நாட்களாக வைத்திருக்கிறார். தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முகமது கைப் மிகவும் பாராட்டி பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 13 போட்டிகளில், 66 ஆவரேஜில், 155 ஸ்ட்ரைக் ரேட்டில், ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன், மூன்று முறை நாட் அவுட் ஆக இருந்து 661 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று போகும்பொழுது, இந்த ரன் உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் முகமது கைப் கூறும் பொழுது “ஒரு துறவி இமயமலைக்கு சென்று தியானத்தில் இருக்கும் பொழுது அவர் வேறு ஒரு மண்டலத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் அவர் முன்னால் யார் கத்தினாலும் அழுதாலும் என்ன செய்தாலும் அது அந்த துறவியை பாதிக்காது. விராட் கோலி தற்பொழுது அந்த மண்டலத்தை அடைந்து விட்டார்.

அவர் ஸ்கோர் கார்டை பார்ப்பது கிடையாது. அவர் தன்னுடைய ஜோனில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். எந்த வகையான பந்துவீச்சாளர் வந்தாலும் அவர்களை எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவர் ஒரு ஜோனை அடைந்து விட்டார். அங்கு அவருக்கு எந்தவித போட்டியும் கிடையாது.

அவர் வெற்றி பெறுவதற்காக மட்டுமே வந்திருக்கிறார். அணி வெற்றி பெற்றால் மட்டுமே திருப்தி அடைவேன் என்கின்ற ஆவேசத்துடன் காணப்படுகிறார். அது இரண்டாவது போட்டியில் இருந்து தெளிவாக தெரிகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக முஸ்தஃபிசுர் ரஹமான் வீசிய மெதுவான பவுன்சரில் ரகானே இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிவிட்டார் .

- Advertisement -

இதையும் படிங்க : நான் வெற்றி தோல்வியை பார்க்கிற கேப்டன் கிடையாது.. நான் வேற மாதிரியான ஆளு – ஹர்திக் பாண்டியா பேட்டி

ஆனால் பஞ்சாபுக்கு எதிராக இரண்டாவது போட்டியில் அவர் தெளிவாக வந்தார். ரபாடாவை இறங்கி வந்து கவரில் அடித்தார். மேலும் ஸ்பின்னர்களை ஸ்லாக் ஸ்வீப் விளையாடினார். நீங்கள் அவருடைய நான்காவது கியரை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் அவர் 15 வது கியரில் இருக்கிறார். யாரும் அடைய முடியாத நிலையை எட்டி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.