இந்திய கிரிக்கெட்

மும்முனை பிளான்.. எங்களுக்கு யுஏஇ ஆஸி ரெண்டும் ஒன்னுதான்.. கெத்து காட்டிய கம்பீர் மூவ்

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வித்தியாசமான திட்டத்துடன் களம் இறங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று காண் பேரா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது மழை குறுக்கிட்ட நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் 5 ஓவர்களில் எடுத்திருக்கிறது.

கம்பீரின் மாஸ்டர் பிளான்

நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களின் இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருவரும் இடம் பெற்று இருந்தார்கள். அப்போது மிகவும் விமர்சிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது.

மேலும் இதன் காரணமாக இந்திய t20 அணியில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என மொத்தம் மூன்று ஸ்பின்னர்கள் இடம் பெற்றார்கள். இந்த காம்பினேஷனை கம்பீர் பெரிய அளவில் விரும்புகிறார். இதை மாற்றுவதற்கு அவர் தயாராக இல்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியாவிலும் அப்படியே…

இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிரான போட்டியிலும் பும்ரா ஹர்ஷித் ராணாவை மற்றும் சிவம் துபேவை வைத்துக்கொண்டு, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தியை கம்பீர் களம் இறக்கி இருக்கிறார். அவருடைய திட்டத்தை ஆஸ்திரேலியாவிலும் மாற்றிக் கொள்ளவில்லை. ஸ்பின்னர்கள் மூலம் மும்முனை தாக்குதலை தொடுக்க கம்பீர் திட்டத்தை அமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 38 வருடம் 182 நாட்கள்.. ஐசிசி ரேங்க் சாதித்த ரோகித்.. கில்லுக்கு சோகம் – புதிய சரித்திரம்

இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சிவம் துபே, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.

- Advertisement -
Published by