38 வருடம் 182 நாட்கள்.. ஐசிசி ரேங்க் சாதித்த ரோகித்.. கில்லுக்கு சோகம் – புதிய சரித்திரம்

0
78
Rohit

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் ரேங்க் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அரை சதம் மற்றும் சதம் அடித்து எட்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் கில்லுக்கு சரிவு

இதற்கு முன்பாக தற்போதைய இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதல் இடத்தில் இருந்து வந்தார். ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

தற்போது ரோகித் சர்மா 781 புள்ளிகள் உடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். முதல் இடத்தில் இருந்து வந்த கில் இரண்டு இடங்கள் சரிந்து 745 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தானில் இப்ராகிம் ஜட்ரன் 764 புள்ளிகள் உடன் இருக்கிறார்.

- Advertisement -

சாதித்த ரோகித் சர்மா

தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயது 182 நாட்கள் ஆகிறது. இந்த வயதில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா தொடரில் அவர் விளையாடிய விதம் பலருக்கும் ஊக்கத்தை அளிக்க கூடியதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 175 ரன்.. ODI கிரிக்கெட்டை மறந்த இங்கிலாந்தின் சோகம்.. வச்சு செய்த நியூசிலாந்து.. தொடரை கைப்பற்றி அபாரம்

ODI பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல்:

ரோஹித் ஷர்மா – 781
இப்ராஹிம் ஜட்ரன் -764
சுப்மன் கில் – 745
பாபர் அசாம் -739
டேரில் மிட்செல் – 734
விராட் கோஹ்லி – 725
சரித் அசலங்க – 716
ஹாரி டெக்டர் – 708
ஷ்ரேயாஸ் ஐயர் – 700
ஷாய் ஹோப் – 690

- Advertisement -