அவர்கிட்ட அது சம்பந்தமா 10-15 நிமிஷம் தான் பேசினேன்.. அதிசயமானது ஆனா பதட்டமானது – ரியான் பராக் பேட்டி

0
51
Parag

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் 22 வயதான ரியான் பராக் பேட்டிங் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இவர் விராட் கோலி தோனி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியவருடனான தனது தொடர்புகள் பற்றி பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரியான் பராக் அதிக ரன் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் மிக இளவயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வந்த இவரது ஆட்டம் சுமாராகவே இருந்து வந்தது.

- Advertisement -

கடந்த ஆண்டிலிருந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாடு என மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அசாம் மாநில அணிக்காக தனி ஒரு வீரராக பல போட்டிகளில் அணியை வெல்லவும் வைத்திருக்கிறார் கௌரவமான நிலைக்கு கூட்டி செல்லவும் செய்திருக்கிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஃபார்ம் தற்போது ஐபிஎல் தொடரிலும் இவருக்கு தொடர்கிறது. எனவே சீக்கிரத்தில் இந்திய அணிகளும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த நிலையில் ரியான் பராக் பேசும் பொழுது ” என்னுடைய ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் நான் சரியான நிலையில் இல்லை. என்னுடைய பார்ம் அப்பொழுது மோசமாக இருந்தது. அப்பொழுது விராட் கோலி அவர்களிடம் 10 முதல் 15 நிமிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் அனுபவத்தின் வழியாக எனக்கு சில அறிவுரைகளை கூறினார். அது எனக்குதொடர்ந்து கிரிக்கெட்டில் நிறைய உதவி செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தோனி சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக இருக்கும் பொழுது நான் அந்த அணிக்கு எதிராக விளையாடிய உணர்வு அதிசயமானது. அது எனக்கு மறந்தே விட்டது. ஆனால் நிச்சயமாக நான் பதட்டமாக இருந்தது உண்மை. அந்தப் போட்டியில் நான் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் நல்லாவே இல்ல.. பிசிசிஐ தயவு செய்து இதை மாத்தி வைங்க.. அப்பதான் சரிவரும் – கவாஸ்கர் கோரிக்கை

நான் ராகுல் டிராவிட் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டுக்கு வெளியே, சமூக வலைதளங்களில் நாம் எப்படி நடந்து கொள்வது என பல முக்கியமான விஷயங்களை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.