161 ரன்.. ராகுல் ருதுராஜ் மீண்டும் ஏமாற்றம்.. தனியாளாய் கலக்கிய ஜுரல்.. ஆஸி ஏ அணி அபார பந்துவீச்சு

0
4989
Ruturaj

இன்று துவங்கிய ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் சுருண்டது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய ஏ அணியில் இரண்டு முக்கிய வீரர்கள்

இந்த போட்டியில் இந்திய ஏ அணியில் கேஎல்.ராகுல் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் இருவரும் இடம் பெற்றார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்த இரண்டு வீரர்களுக்கும் இது முக்கியமான பயிற்சி போட்டியாக அமைகிறது. மேலும் கேஎல்.ராகுல் மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அபிமன்யு ஈஸ்வரன் மூன்று பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்ட கேஎல்.ராகுல் நான்கு பந்தில் நான்கு ரன்கள் எடுத்து வெளியேறினார். சாய் சுதர்சன் கோல்டன் டக் அடிக்க, நான்காவது இடத்தில் வந்த கேப்டன் ருதுராஜ் 6 பந்தில் நான்கு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

தனியாளாய் போராடிய துருவ் ஜுரல்

இதைத் தொடர்ந்து வந்த படிக்கல் தன் பங்குக்கு 26, நிதீஷ் குமார் ரெட்டி 16, தனுஷ் கோட்டியன் 0, கலீல் அகமத் 1, பிரசித் கிருஷ்ணா 14, முகேஷ் குமார் 5* ரன்கள் எடுத்தார்கள். இன்னொரு முனையில் தனியாளாய் போராடிய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் 186 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியை ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார்.

இதையும் படிங்க : 267 ரன்.. 7 ஓவர் மீதி.. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வெற்றி.. தொடரை இழந்த இங்கிலாந்து அணி.. 3வது ODI

இந்திய ஏ அணி இறுதியில் 57.1 ஓவரில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய ஏ அணியின் தரப்பில் நேசர் 4, வெப்ஸ்டெர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பில்லாமல் 20 ரன்கள் தாண்டி எடுத்து விளையாடுகிறது.

- Advertisement -