மாஸ் காட்டும் மும்பை பரம்பரை.. ஜெய்ஸ்வால் சர்பராஸ் கான் அதிரடி.. இந்தியா 440 ரன் முன்னிலை

0
250
Jaiswal

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்று இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு 126 ரன்கள் முன்னிலை கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று களத்தில் இருந்து இன்று போட்டியை ஆரம்பித்த சுப்மன் கில் 91, குல்தீப் யாதவ் 27 என இருவரும் 50 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து நேற்று காயம் காரணமாக பேட்டிங் செய்வதில் இருந்து பாதியில் வெளியேறிய ஜெய்ஷ்வால் இன்று மீண்டும் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார்.

இதற்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் இந்த முறை ரவீந்திர ஜடேஜாவை அனுப்பாமல், முதல் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரர் சர்பராஸ் கானை அனுப்பினார்கள்.

- Advertisement -

மும்பை மாநில அணிக்காக விளையாடும் இந்த இருவரும் சேர்ந்து கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ரன்களை கொண்டு வந்தார்கள்.

ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸர் அடித்து ஆரம்பிக்க, உடனே சர்ப்ராஸ் கான் ஒரு சிக்சரை அடித்தார். இதற்கு அடுத்து இரண்டு பவுண்டரிகளை வெகு அனாயசமாக லெக் சைடில் அனுப்பினார்.

இன்னொரு புறத்தில் ஜெய்ஷ்வால் கடைசி ஓவர் என்று கூட பார்க்காமல் பந்தை சிக்ஸருக்கு அடித்ததோடு அதை தொலைக்கவும் செய்தார். இந்த மும்பை ஜோடி அதிரடியாக விளையாடுவது மட்டுமில்லாமல், புத்திசாலித்தனமாக ஆள் இல்லாத இடத்தில் பந்து தூக்கி அடித்த ரன்கள் எடுக்கிறது. இவர்கள் விக்கெட்டையும் காப்பாற்றிக் கொண்டு அதிரடி காட்டுவதால், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

தற்பொழுது ஜெய்ஸ்வால் 149, சர்பராஸ் கான் 22 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த ஜோடி 63 பந்துகளில் அதிரடியாக 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி தற்பொழுது 440 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் நான்காவது நாள் முதல் செஷனில் மட்டும் 118 ரன்கள் குவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 71 வருடத்தில் 6வது வீரர் கில்.. தோனிக்கு அடுத்து 12 வருடம்.. வித்தியாச பட்டியலில் சேர்ந்தார்

இந்திய அணி இதற்கு மேல் எவ்வளவு ரன்கள் குவித்து டிக்ளேர் செய்யும்? என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும். எப்படியும் 500 ரன்கள் தாண்டியே இந்திய அணி டிக்ளேர் செய்யும். இவ்வளவு பெரிய ரன்னையும் ஜெயிப்பதற்காக இங்கிலாந்து பாஸ்பால் முறையில் விளையாடுமா? என தற்பொழுது ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.