இந்திய டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றி.. ஜெய்ஷ்வால் ஜடேஜா ஹீரோஸ்.. இங்கிலாந்து பரிதாப தோல்வி

0
457
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குறித்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அடுத்த தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 153 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

126 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 214 ரன்கள் குவித்தார். இந்தியா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து அணிக்கு இலக்காக மொத்தம் 556 ரன்கள் நிர்ணைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி சீட்டு கட்டு போல அப்படியே மொத்தமாக சரிந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி பென் டக்கெட் 4, ஜாக் கிரௌலி 11, போப் 3, ரூட் 7, பேர்ஸ்டோ 4, ஸ்டோக்ஸ் 15, போக்ஸ் 16, ரேகான் அஹமத் 0, டாம் ஹார்ட்லி 16, மார்க் வுட் 33, ஆண்டர்சன் 1* ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : பாஸ்பால் மெக்கலம் சாதனையை.. அவர் கண் முன்னாலே உடைத்த ஜெய்ஸ்வால்.. ரோகித் சாதனையும் காலி

இதையடுத்து இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய ரன் வித்தியாச வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட் பந்துவீச்சில் கைப்பற்றி இருக்கிறார்.