பாஸ்பால் மெக்கலம் சாதனையை.. அவர் கண் முன்னாலே உடைத்த ஜெய்ஸ்வால்.. ரோகித் சாதனையும் காலி

0
1230
Jaiswal

இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நான்காவது நாளில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

நேற்று மூன்றாவது நாளின் முடிவுக்கு சில ஓவர்கள் இருந்த பொழுது சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக வெளியேறினார்.

- Advertisement -

இன்று தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கில் ரன் அவுட் ஆகி வெளியேற, அடுத்த விக்கெட்டுக்கு உடனடியாக ஜெய்ஸ்வால் அனுப்பப்பட்டார்.

எந்த இடத்தில் இருந்து ஜெய்ஸ்வால் நேற்று விட்டு இருந்தாரோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளைக்கு சென்று வந்ததும், அவருடைய ஆட்டத்தில் மேலும் உக்கிரம் கூடியது.

லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் விளாசி, அடுத்து அவருக்கு ஓவர் தருவதையே பென் ஸ்டோக்சை நிறுத்த வைத்தார்.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடியவரின் பேட்டில் இருந்து சிக்ஸர்கள் வந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக மிகச் சிறப்பாக விளையாடிய அவர் தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தினார்.

மேலும் இரட்டை சதத்தை அடித்த பிறகும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து தனது தீராத ரன் தாகத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் அவர் மொத்தம் 12 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 22 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரு பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் எண்ணிக்கையாக இது பதிவானது. 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா 19 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இன்று தனது கேப்டனின் உலக சாதனையை ஜெய்ஸ்வால் உடைத்திருக்கிறார்.

மேலும் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்தவராக வாசிம் அக்ரம் 12 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்பொழுது ஜெய்ஸ்வால் இரட்டை சதத்துடன் 12 சிக்ஸர்கள் அடித்ததால் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு வந்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

மேலும் இதே பட்டியலில் தற்போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்கும் அதிரடி வீரர். மெக்கலம் 11 சிக்ஸர்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடிக்கு பெயர் பெற்ற அவர் முன்னாலேயே, அவர் அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் மிகப் பிரம்மாண்டமான சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வாலுக்கு சர்பராஸ் கான் களத்தில் செய்த 2 நெகிழ்ச்சியான செயல்.. என்ன மாதிரியான வீரர்

ஒரு டெஸ்ட் போட்டி இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியல் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 12
வாசிம் அக்ரம் – 12
நாதன் ஆஸ்ட்லே – 11
மேத்யூ ஹைடன் – 11
பிரண்டன் மெக்கலம் – 11
பிரண்டன் மெக்குலம் – 11
பென் ஸ்டோக்ஸ் – 11
குசல் மெண்டிஸ் – 11
வாலி ஹம்மண்ட் – 10
கிறிஸ் கெய்ன்ஸ் – 9