U19 WC பைனல்.. இந்தியா ஆஸி மோதல்.. 2023 WC தோல்விக்கு இந்திய இளைஞர் படை பதிலடி தருமா? போட்டி எப்பொழுது?

0
684
ICT

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்பொழுது இறுதிப் போட்டியை நோக்கி சென்று இருக்கிறது.

நேற்று முன்தினம் முதல் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் விளையாட வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் இருவரும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்கள். இதே போல் பந்துவீச்சில் ராஜ் லிம்பானி மற்றும் சௌமை பாண்டே இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் வைத்திருந்த ஆஸ்திரேலியா அணி, கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோத இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதுவதை விட ஆஸ்திரேலியா அணி மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று கூற வேண்டும்.

ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றிய இருந்தது.

தற்பொழுது இதற்கு இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஒரு உடனடி பதிலடி தருவதற்கு, இந்திய இளைஞர் அணி மூலமாக ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக இளைஞர் படை பதிலடி தருமா என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆவலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : U19WC.. 16ரன் 1விக்கெட்.. பாகிஸ்தான் அணி கண்ணீர்.. பைனலில் இந்தியாவுடன் ஆஸி மோதுகிறது

இந்த இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 11ம் தேதி இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெற்ற அதே மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!