U19WC.. 16ரன் 1விக்கெட்.. பாகிஸ்தான் அணி கண்ணீர்.. பைனலில் இந்தியாவுடன் ஆஸி மோதுகிறது

0
651
Pakistan

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்த அஸன் அவைஸ் 52(91), அராபத் மின்ஹாஸ் 52(61) ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் மொத்தம் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்கள் எடுக்க, அந்த அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 24 ரன்கள் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான நெருக்கடியை கொடுத்தார்கள். அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இருந்த அதிர்ஷ்டம் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இல்லாமல் போனது.

ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஹேரி டிக்சன் 50(75), ஒலிவர் பீக் 49(75), டாம் கேம்பல் 25 (42) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அலி ராஸா வீசிய ஆட்டத்தின் 46வது ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலியா அணி கடைசி 24 பந்துகளுக்கு அதாவது நான்கு ஓவர்களுக்கு 16 ரன்கள் வெற்றிக்கு எடுக்க வேண்டியது இருந்தது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் களத்தில் இருந்த ராப் மேக்மிலன் மற்றும் கல்லும் விட்லர் இருவரும் கடைசி ஓவருக்கு மூன்று ரன்கள் தேவை என்கின்ற இடத்துக்கு ஆட்டத்தை நகர்த்தி வந்து விட்டார்கள். இந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் இன்சைடு எட்ஜ் எடுத்து பந்து பவுண்டரிக்கு உருண்டு செல்ல, ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் அண்டர் 19 இறுதிப் போட்டி கனவும் முடிவுக்கு வந்துவிட்டது. கடுமையாக போராடிய பாகிஸ்தான் வீரர்கள் வெற்றியை பறிகொடுத்த காரணத்தினால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு களத்தில் காணப்பட்டார்கள். பாகிஸ்தான் அணிக்கு வீரப்பந்துவீச்சாளர் அலி ராஸா மிகச் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : “விராட் கோலி கிடையாது.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்தான் இப்ப டாப்” – மைக்கேல் கிளார்க் தேர்வு

இந்தத் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க நாட்டின் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. தற்பொழுது இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா இந்திய அணி எதிர்த்து இறுதி போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.