டெஸ்ட் சீரிஸ்.. ஆஸியின் பக்கா ஸ்கெட்ச்.. பதிலடியாக இந்தியா மாஸ்டர் பிளான்.. புதிய போட்டிகள்

0
3132
BCCI

இந்திய அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்ட்ரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தற்போது இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அதிவேக ஆடுகளத்தை கொண்ட ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ஆம் தேதி விளையாடுகிறது. கடைசி டெஸ்ட் போட்டியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் விளையாடி முடிக்கிறது.

- Advertisement -

கடந்த ஐந்து முறையாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி இந்தியாவின் கைவசமே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியாவிற்கு சென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது. டெஸ்ட் கிரிக்கெட்டை தங்களுடைய கௌரவமாக கருதும் ஆஸ்திரேலியாவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

எனவே இந்த தொடரை எப்படியும் வெல்ல வேண்டும் என்று, முதல் போட்டியை அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆரம்பிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சாதகமான அடிலைடு ஓவல் மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களில் அடுத்தடுத்த போட்டிகள் வருகிறது. முதல் மூன்று போட்டிகளை தங்களுக்கு சாதகமான மைதானத்தில் அமைத்து திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் இந்த திட்டமிடங்களுக்கு பதிலடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய ஏ அணியை ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுப்புகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 31ஆம் தேதியும், இரண்டாவது போட்டி நவம்பர் 7ஆம் தேதியும் துவங்குகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ-ல செலக்ட் ஆகாதது பெரிய வருத்தமா இருந்தது.. ரோகித் பாய் என்கிட்ட சொன்னது இதுதான் – ரிங்கு சிங் பேட்டி

இத்தோடு அங்கு சென்று விளையாடும் இந்திய ஏ அணிக்கு எதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. தங்களது ஜூனியர் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்து அசத்தியிருக்கிறது. இந்தப் போட்டி நவம்பர் 15 ம் தேதி ஆரம்பிக்கிறது. மேலும் இந்திய ஏ அணியில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு எதிராக இந்திய அணிகள் இடம் பிடிக்கும் சில வீரர்களும் இடம் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான பதில் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது!