இந்திய அணி வீரர்களுக்கு ஆசிய கோப்பை வழங்கப்படாதது குறித்து தனது ஏமாற்றத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் கையிப் வெளிப்படுத்தினார். 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மேடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, அவர் கோப்பையே இல்லாமல் போல் கொண்டாடி நடித்தார். இது குறித்து பேசிய கையிப், “இந்திய அணி இந்த கோப்பை வாங்க தகுதியானவர்கள். கடினமாக உழைத்து, குறிப்பாக திலக் வர்மாவின் அபாரமான ஆட்டமிழக்காத இன்னிங்ஸால் இறுதிப் போட்டியை வென்ற பிறகு, அவர்கள் கொண்டாடவும், கோப்பையுடன் புகைப்படம் எடுக்கவும் உரிமை பெற்றிருந்தனர்.”
“கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்த இளம் அணி, இதுபோன்ற தருணங்கள் வாழ்நாள் நினைவுகளாக மாறும். இது 1983 உலகக் கோப்பையை பார்த்து நாங்கள் ஊக்கமடைந்தது போல் இளம் வீரர்களை இந்தியாவிற்காக ஆட வைக்கும். மைதானத்தில் வீரர்கள் இதை மறுக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இருப்பினும் கோப்பை பின்னர் அவர்களுக்கு வந்து சேரும்.”
“ஹரிஸ் ரவுஃபை குறிவைத்தது இந்த போட்டியின் திருப்புமுனையாக இருந்தது. இது திட்டமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது சிரமங்கள் இருந்தன. ஆனால், ரவுஃப் பந்து வீச வந்தபோது, அவர்கள் அவரை குறிவைக்க முடியும் என்று உணர்ந்தனர். அவருக்கு பல வகையான பந்துவீச்சு மாறுபாடுகள் இல்லை.”
“இந்தியாவின் மிகப்பெரிய புத்திசாலித்தனம் இந்த போட்டியில் அவர்கள் கணக்கு போட்ட விசயம் தான். ஹரிஸ் நான்கு ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரை தாக்கியது திட்டம் இருந்ததை காட்டுகிறது. அழுத்தமான போட்டிகளில், மனதைப் பயன்படுத்த வேண்டும். பல வீரர்களுக்கு திறமைகள் உள்ளன. ஆனால் இந்த அழுத்தத்தில், மனதைப் பயன்படுத்துபவர் தான் போட்டியை வெல்பவர்.”
“குல்தீப், அக்ஸர் மற்றும் வருண் போன்ற சுழற்பந்துவீசாளர்களுக்கு எதிராக சும்மா பயிற்சி செய்து தயாராக முடியாது. பாகிஸ்தானின் இளம் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை ஆட முடியும், ஆனால் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது அவர்களின் பெரிய பலவீனம். அவர்கள் பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களை குறிவைத்து மீண்டு வரலாம் என்று நினைக்கிறார்கள்.”
இதையும் படிங்க: என் நாட்டுக்காக விளையாடினேன்.. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.. வெற்றி குறித்து பேசிய திலக் வர்மா
“ஆனால் அது நடக்காது. திலக் இதுபோன்ற பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடியது போல் ஆட வேண்டும். குல்தீப், அக்ஸர் மற்றும் வருண் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் பலமுறை இதைச் செய்த திறமையான பந்து வீச்சாளர்கள்.” என்று கையிப் தெரிவித்துள்ளார். நேற்றைய பைனலில் குல்தீப் நான்கு விக்கெட்டுகளும் அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.