என் நாட்டுக்காக விளையாடினேன்.. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.. வெற்றி குறித்து பேசிய திலக் வர்மா

0
52

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை நடப்பு தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய கோப்பையை ஒன்பதாவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

இந்த தொடரில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நெருக்கடிகளை சந்தித்தது. எனினும் இந்தியாவின் இளம் வீரர் திலக் வர்மா அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

- Advertisement -

இதில் மூன்று பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா ஒரு சிக்சரை அடித்து போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தியது. இதேபோன்று இந்த தொடரில் ரிங்கு சிங் தற்போது தான் ஒரே ஒரு பந்தை எதிர்கொண்டார். அதிலும் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

நாட்டுக்காக விளையாடினேன்:

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய திலக் வர்மா, “பைனல் கொஞ்சம் அழுத்தமாக இருந்தது. ஆனால் நான் களத்தில் நின்று ஆட்டத்தை முடிக்க விரும்பினேன். அவர்கள் பந்து வீச்சில் வேகத்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக இருந்து என் நாட்டுக்காக ஆட்டத்தை முடிக்க விரும்பினேன். சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது.”

- Advertisement -

“அது அணிக்கு மிகவும் முக்கியமானது. துபே பேட்டிங் செய்த விதமும் எனக்கும் நாட்டுக்கும் உதவியாக இருந்தது. இருவருக்கும் பாராட்டுக்ள். நாங்கள் எல்லா இடங்களுக்கும் தயாராக இருக்கிறோம். கவுதி பாய் எல்லா இடங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். நான் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன்.”

ஒவ்வொரு இந்தியனுக்கும்..

“என் ஆட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தேன். நான் கடினமாக உழைத்தேன். குறிப்பாக இது போன்ற மெதுவான விக்கெட்டுகளில் ஸ்வீப் ஷாட்கள், ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது எனக்கு உதவியது. இது மிகவும் சிறப்பானது. என் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் பொருந்தும். சக் தே இந்தியா” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை பைனல்.. இவர் தான் அடுத்த விராட் கோலி.. பதற்றமே இல்லாத பக்கா இன்னிங்ஸ்

“தொடர்ந்து பேசிய ரிங்கு சிங், எத்தனை பந்துகள் கிடைத்தாலும் அதில் அதிகம் பங்களிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ரன்கள் தேவைப்பட்டபோது நான் ஒரு நல்ல ஷாட் அடித்தேன். எல்லோரும் என்னை ஒரு ஃபினிஷர் என்று அழைக்கிறார்கள், இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அணி வெற்றி பெற்றுள்ளது. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -