ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த சூழலில் இந்த போட்டிக்கு முன்னோட்டமாக இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் பல இந்திய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் விதமாக பல வீரர்களை பிசிசிஐ இந்த ஏ அணியில் அனுப்பி இருக்கிறது. இதனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் முதல் டெஸ்ட் போட்டி கேட்பரியில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால் அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதீஷ்குமார் ரெட்டி, சர்துல் தாக்கூர் போன்ற சீனியர் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார்கள்.
இதில் கேப்டனாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன் முதல் நாள் ஆட்டத்தில் அபாரமாக தொடங்கினார். இரண்டு பவுண்டரிகளை விரட்டி அவர் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தபோது எல்பி டபிள்யூ ஆனார். மறுபுறம் ஜெய்ஸ்வால் வழக்கம்போல் அதிரடி காட்டி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார்.
மூன்றாவது வீரராக கருண் நாயர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய மெயின் அணியில் வாய்ப்பு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் எல்லாம் இந்திய ஏ டெஸ்டில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இதன் மூலம் மெயின் தொடரில் இவர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஈகோ அதிகமாயிடுச்சு.. அடுத்து அவர் இதை செய்யலைனா கஷ்டம் – டாம் மூடி பேச்சு
சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதியும் நடைபெறுகிறது.