நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் தன்னுடைய ஈகோவை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.
நேற்று ஐபிஎல் முதல் தகுதிச்சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சி செய்து கொத்துக்கொத்தாக விக்கட்டுகளை கொடுத்து 101 ரன்னில் ஆல் அவுட் ஆனார்கள். அவர்கள் பேட்டிங் அணுகுமுறை தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
பஞ்சாப் வெற்றியின் காரணம்
பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்கு பேட்ஸ்மேன் அனைவரும் சூழ்நிலையைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடியதுதான் முக்கிய காரணமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதுவே அவர்களுக்கு சில நேரங்களில் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு குறிப்பாக ஆடுகளத்தில் கொஞ்சம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் இருக்கும் பொழுது பிரச்சனை உண்டாகிறது. அவர்கள் ஆடுகளத்திற்கு ஏற்றது போல தங்கள் பேட்டிங் அணுகுமுறையை கொள்ளாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சி செய்வது பிரச்சனையாக மாறி இருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஈகோவை விடுங்க
இதுகுறித்து டாம் மூடி பேசும்பொழுது “சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய ஈகோவை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு போக வேண்டும். நீங்கள் உங்கள் பெருமை எல்லாம் கைவிட்டு விட்டு, அந்த சூழ்நிலைக்கு என்ன தேவையோ அந்த முறையில் விளையாட வேண்டியது இருக்கும். அந்த வகையில் நீங்கள் முன்னேறி செல்ல முயற்சி செய்ய வேண்டும்”
இதையும் படிங்க : 53 பந்து 82 ரன்.. ஐபிஎல்ல விராட் கோலி எனக்கு நடத்தின அந்த பாடம்தான்.. பெட்டர் பேட்ஸ்மேனா மாற காரணம் – ஜேக்கப் பெத்தேல் பேட்டி
“நேற்று ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஈகோவை கட்டுப்படுத்த தவறிவிட்டார். அவர் ஹேசில்வுட்டுக்கு எதிராக எத்தனை முறை ஆட்டம் இழந்து இருக்கிறார் என்கின்ற எண்கள் அவருக்கு மிக நன்றாகவே தெரியும். மேலும் சூழ்நிலைக்கு தக்கபடி அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை, ஈகோ சில நேரங்களில் நமக்கு சரிவராது” என்று கூறி இருக்கிறார்.






