245 to 347.. கடைசியில் ராபின்சன் தொந்தரவு.. ஜடேஜா இங்கிலாந்து இன்னிங்ஸ்க்கு முடிவு கட்டினார்

0
259
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதத்தால் இங்கிலாந்து அணி நிமிர்ந்து இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் 11, ஒல்லி போப் 0, ஜாக் கிரௌலி 42, பேர்ஸ்டோ 38, பென் ஸ்டோக்ஸ் 3 ரன் என மொத்தம் 112 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்து விளையாடிய ஜோ ரூட் மற்றும் பென்ஃபோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை கொஞ்சமாக மீட்டார்கள். இந்த ஜோடி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பென் ஃபோக்ஸ் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 13 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் இணைந்த ராபின்சன், நேற்று முதல் நாள் முடிவில் விக்கெட் விடாமல் விளையாடி முடித்தார்.

இன்று தொடர்ந்து நடந்த போட்டியில் ராபின்சன் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அடுத்து வந்த சோயப் பசிர் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த ஆண்டர்சன் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் 353 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : “20 வருஷம் இந்த இந்திய பையன் விளையாடுவான்.. இங்கிலாந்து வாய்க்கு வந்ததை பேசக்கூடாது” – கிறிஸ் கெயில் பேட்டி

இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட், ஆகாஷ் தீப் மூன்று விக்கெட், சிராஜ் இரண்டு விக்கெட் மற்றும் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.