“20 வருஷம் இந்த இந்திய பையன் விளையாடுவான்.. இங்கிலாந்து வாய்க்கு வந்ததை பேசக்கூடாது” – கிறிஸ் கெயில் பேட்டி

0
275
Gayle

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இதுவரையில் 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 545 ரன்கள் குவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் அதே நேரத்தில், அவர்களுக்கு எதிராக அவர்களை விட அதிரடியாக ஜெய்ஸ்வால் விளையாடுகிறார். எப்பொழுது ரன் தேவையோ அவர் இஷ்டப்படும் நேரத்தில் எடுத்துக் கொள்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து அணியை பார்த்து அதிரடியாக விளையாடுகிறார் என்று, இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசி இருந்தார்.

அவருடைய இந்த பேச்சுக்கு இங்கிலாந்தில் இருந்து பலமான எதிர்ப்புகள் வந்தது. மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன் போன்றவர்கள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் குதித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து விளையாடுவதற்கு முன்பாகவே ரிச்சர்ட்ஸ் அதிரடியாக விளையாடுவதற்கான பாதையை அமைத்திருந்தார். அதற்கு அடுத்து லாராவும் அதிரடியான முறையில் விளையாடியிருந்தார். இவர்களுடைய புள்ளிவிபரங்களை எடுத்து பார்த்தால் அவர்கள் எப்படி தாக்குதல் ஆட்டம் விளையாடி இருக்கிறார்கள் என்று தெரியும்.

ஜெய் ஸ்வால் இங்கிலாந்தை பார்த்து அதிரடியாக விளையாட கற்றுக் கொண்டார் என்று நான் நினைக்கவில்லை. அவர் பயிற்சியாளர் மற்றும் மெண்டர் உடன் சேர்ந்து தனது திறமையை வளர்த்து இருக்கிறார். 20ஆண்டுகள் விளையாடும் வீரர் போல அவர் தெரிகிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் டீம் மேட்.. 8 மணி நேரம் 19 நிமிடங்கள்.. 302 ரன்கள்.. அபார சாதனை

அவர் தொடர்ந்து விளையாடும்போது அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உருவாகும். அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவதற்கு அவரை அனுமதிக்க வேண்டும். அவரைப் போன்ற ஒரு வீரரை எந்த சூழ்நிலைக்காகவும் தடுக்கக்கூடாது” எனக் கூறியிருக்கிறார்.