இந்திய வீரர்கள் இல்லை.. நான் பார்த்து சுயநலமற்ற கிரிக்கெட் வீரர் இவர்தான் – கம்பீர் மிக உருக்கமான பேச்சு

0
173
Gambhir

இந்திய அணி பெரிய கோப்பைகளை வென்ற பொழுது முக்கியமான ஆட்டங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டதில் கவுதம் கம்பீருக்கு முக்கியமான இடம் இருக்கிறது. 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதில் கம்பீர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் ஆரம்பித்து 2010 ஆம் ஆண்டு வரை முதல் மூன்று ஆண்டுகள் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இதற்கு அடுத்து 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடியதோடு கேப்டனாகவும் செயல்பட்டார்.

- Advertisement -

இவருடைய தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதற்குப் பிறகு கொல்கத்தா அணி கோப்பையை ஒரு முறை நெருங்கி சென்று தோற்று இருக்கிறது. மற்றபடி இவரது தலைமைக்கு அடுத்து குறிப்பிடத்தக்க ஐபிஎல் செயல்பாடு அந்த அணிக்கு இல்லை.

இந்த நிலையில் லக்னோ அணியின் மென்டர் பொறுப்பு மற்றும் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர் மீண்டும் தன்னுடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பி மென்டர் பொறுப்பை ஏற்று இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு புதிய அணியாக ஐபிஎல் தொடருக்கு வந்த லக்னோ அணி இரண்டு முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்றதில் கம்பீர் பங்கு பெரியது. ஆயுஸ் பதோனி போன்ற இளம் வீரர்கள் அணிக்கு உள்ளே வருவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த முறை அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வந்ததுமே, அணிக்கு கடைசி கட்ட பந்துவீச்சாளர் தேவை என்பதை உணர்ந்து ஐபிஎல் வரலாற்றில் பெரிய தொகை கொடுத்து மிட்சல் ஸ்டார்க்கை அந்த இடத்திற்கு வாங்கினார். எனவே இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றை எட்ட தீவிரமான போட்டியை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவர்தான் எனக்கு தலைமையைக் கற்றுக் கொடுத்தார்

இந்த நிலையில் ஆரம்பத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விளையாடிய பொழுது, அந்த அணியில் இடம் பெற்று விளையாடியவரும் தற்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் இருக்கக்கூடிய நெதர்லாந்தை சேர்ந்த ரியான் டென் டோஸ்கட் பற்றி மிக உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “நான் சுயநலமற்ற தன்மையை பற்றி பேசும்பொழுது, நான் விளையாடியதில் மிகச்சிறந்த வீரர், கொஞ்சமும் சுயநலமற்ற மனிதர், நான் யாருக்காக புல்லட்டை வாங்கிக் கொள்ள முடியும், யாரை எப்பொழுதும் நம்ப முடியும் என்றால் அது ரியான் டென் டோஸ்கட்தான். இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறப்பாக நெதர்லாந்து அணிக்கு விளையாடு இருந்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: சிஎஸ்கே அணியில் கவனிக்க வேண்டிய 5 அன்கேப்டு இந்திய இளம் வீரர்கள்

நான்கு வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடலாம் என்று இருந்த பொழுது, எங்கள் அணிக்கு மூன்று வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் அப்பொழுது தேவைப்பட்டார்கள். சிறப்பான ஃபார்மில் இருந்த பொழுதும் இவரை விளையாட வைக்க முடியவில்லை. ஆனால் இதில் அவர் எந்த ஏமாற்றமும் அடையாமல், மைதானத்தில் வீரர்களுக்கு எப்பொழுதும் தண்ணீர் மற்றும் கூல்டிரிங்ஸ் எடுத்துச் செல்லக் கூடியவராக இருந்தார். இவரைப் போன்றவர்கள்தான் எனக்கு தலைவராக இருக்க கற்றுக் கொடுத்தவர்கள்” என்று குரல் தழுதழுக்க கூறி இருக்கிறார்.