“ஓபனா சொல்றேன்.. ஐபிஎல்-ல இந்த டீமும் ரசிகர்களும்தான் வேற லெவல்” – மேத்யூ ஹைடன் வெளிப்படையான கருத்து

0
122
Hayden

ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியாவின் முன்னால் துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடனுக்கு தனி இடம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அதிரடியான வீரர் என்பது நாம் அறிந்ததே. அதை அப்படியே அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொண்டு வந்தார்.

- Advertisement -

மேலும் அன்றைய காலக்கட்டத்திலேயே ஐபிஎல் தொடரை சுவாரசியப்படுத்தியதில் இவர் செய்த ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் அது மிகவும் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டது.

அதாவது எல்லோரும் சராசரி நீளத்தில் அகலத்தில் பேட்டை கொண்டு வந்த பொழுது. இவர் கைப்பிடி மட்டும் நீளமான மங்கூஸ் எனப்படும் ஒரு வகையான பேட்டை கொண்டு வந்தார். இந்த பேட் பந்தை காற்றில் அடிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற ஒரு வருடத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து இவர் ஓய்வு பெற்றுக் கொண்டார். ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் ஓய்வு பெற்றவர்களில் இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பேசியுள்ள மேத்யூ ஹைடன் ” சென்னை சூப்பர் கிங்ஸ் ஹீரோக்களை விரும்புகிறது. அப்படியான ஹீரோக்களில் அந்த அணியின் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். ஆனால் இளம் வீரர்களை கண்டறிவதில் மும்பை இந்தியன்ஸ் அணியை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை கண்டறிந்து ஒரு பாரம்பரியமான அணிகளை உருவாக்குவதில் சிறந்த அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழ்நாடு என்ற அளவில் பார்க்கும் பொழுது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இப்படியானதுதான். அவர்கள் கல்லி கிரிக்கெட் வரை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டை அவ்வளவு காதலிக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டு நாங்கள் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் ஓய்வு பெற்றேன். நான் ஓய்வு பெற்று தற்பொழுது கிரிக்கெட் வர்ணனை செய்து வருகிறேன். ஆனால் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணியை விட்டு எப்பொழுதும் ஓய்வு பெற மாட்டார்.

இதையும் படிங்க : “இந்தியா கூட விளையாடாதிங்க.. இங்கிலாந்து அணி வெளியேற வேண்டும்..” – டேவிட் லாயிட் விமர்சனம்

சிஎஸ்கே அணியை பொருத்தவரை முதல் இடத்தில் அவர் இருப்பார். எனக்கு இரண்டாவது இடம், ரெய்னாவுக்கு மூன்றாவது இடம் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் வெற்றியை விரும்புகிறார்கள். அதைப் பெற்றுத் தரக்கூடிய வீரர்களை விரும்புகிறார்கள். ஒவ்வொரு தனிநபர் வீரருக்கும் அவர்கள் தங்களுடைய ஆதரவை தருகிறார்கள். அவர்கள் உங்களை எப்பொழுதும் விட்டுவிட மாட்டார்கள்” எனக் கூறியிருக்கிறார்.