“இந்திய டெஸ்ட் தொடரை புறக்கணிங்க.. இங்கிலாந்து அணி எதிர்ப்பை காட்டனும்” – டேவிட் லாயிட் விமர்சனம்

0
309
Lloyd

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இந்தியாவுக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்கள்.

இந்த அணியில் சோயப் பஷீர் என்கின்ற பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு தற்போது இங்கிலாந்து குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இளம் சுழற் பந்துவீச்சாளரும் இடம் பெற்று இருந்தார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு கடைசி நேரத்தில் இந்தியா விசா மறுத்துவிட்டது. அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் சில விஷயங்கள் சரியில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அவர் இதற்காக இங்கிலாந்து திரும்பி இருக்கிறார்.

இதுகுறித்து இன்று பேசியிருந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தியது உடன், இதற்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தார்.

தற்பொழுது இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறும் பொழுது ” தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரண்டு முடிவுகள் எடுக்க வேண்டும். ஒன்று இதை முழுமையாக புறக்கணித்து விட்டு விளையாட வேண்டும். இல்லையென்றால் அவர் வரும் வரை விளையாட மாட்டோம் என்று நிற்க வேண்டும்.

- Advertisement -

கனவை சுமந்து கொண்டு இருக்கும் ஒரு சிறுவனை இப்படி தடுப்பது கொஞ்சமும் சரி கிடையாது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து விளையாட வரும் பொழுது இப்படி நாங்கள் தடுத்ததாக எதுவும் இல்லை. அவருடைய பாகிஸ்தான் பாரம்பரியத்தை தவிர்த்து, இங்கிலாந்து நாட்டுக்காரரான அவரை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்? கடந்த ஆண்டு இதே காரணத்திற்காக உஸ்மான் கவஜா சிரமப்பட்டார். 36 மணி நேரம் தாமதமாக வந்து அணி உடன் இணைந்தார்.

இவ்வளவு வளர்ந்த காலக்கட்டத்தில், வெளிநாட்டு தொடர்களுக்கு செல்லும் பொழுது வீரர்களை இலவசமாக அனுமதிப்பதற்கான வேலைகளைச் செய்யலாம். இது ஒரு கௌரவமான நடவடிக்கையாக இருக்கும்.

இந்த இங்கிலாந்து அணி டிசம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் விசா குறித்த எல்லா வேலைகளையும் முடித்திருக்க வேண்டும். பஷீர் தற்பொழுது மற்ற இங்கிலாந்து வீரர்கள் போல விளையாடி இருக்க வேண்டும். நாம் இப்பொழுது அந்த வீரரை ஆதரிக்க வேண்டும்.

இதையும் படிங்க : “இங்கிலாந்து எப்படியோ விளையாடட்டும் எனக்கென்ன?.. என் கவனம் வேற..!” – ரோகித் சர்மா அதிரடி பேச்சு

வியாழக்கிழமை விளையாட இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியை பசீர் வரும் வரை தாமதப்படுத்த வேண்டும். இந்தியா எங்கள் வீரர் ஒருவரை விளையாட விடாமல் தடுக்கிறது. தேவையற்ற காரணங்களை சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது. அவர் மிகவும் சங்கடமாக இருப்பார். அவர் எந்ததவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு இது கூடாது” எனக் கூறியிருக்கிறார்.