நாங்க ஜெயிக்க ஒரே வழி இது மட்டும்தான் இருந்தது.. ஆனால் திரும்பி 6 போட்டிகளை ஜெயிப்போம் – சுப்மன் கில் பேட்டி

0
200
Gill

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டும் எடுத்து, 8.4 ஓவர்களில் டெல்லி அணியை இலக்கை எட்ட விட்டு படுதோல்வி அடைந்திருக்கிறது. அந்த அணி 7 போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கிறது. இந்த நிலையில் மீதமிருக்கும் ஏழு போட்டிகளில் ஐந்து அல்லது ஆறு போட்டிகளை வெல்வோம் என கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீசியது. குஜராத் அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் 10 பந்தில் 20 ரன்கள் அதிரடியாக எடுத்துக் கொடுத்தார். டெல்லி அணி எந்தவித சிரமமும் இல்லாமல் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 8.4 ஓவர்களில் இழப்பை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதும், குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி காயத்தால் விளையாட முடியாமல் போனதும், அந்த அணியை மிகப்பெரிய அளவில் தற்பொழுது பாதித்திருக்கிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறும்பொழுது “எங்கள் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்தது. நாங்கள் இதிலிருந்து வேகமாக மீண்டும் திரும்பி வருவது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது. ஆடுகளம் சரியாகவே இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 8.4 ஓவரில் சேஸ் செய்த டெல்லி அணி.. ஐபிஎல்-ல் யாரும் செய்யாத சாதனை.. குஜராத் அணி படுதோல்வி

இன்று நாங்கள் விக்கெட்டை இழந்த விதத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது, நாங்கள் விளையாடிய ஷாட்டுகள் மிகவும் மோசமானதாக இருந்தது. 89 ரன்னில் ஆல் அவுட் ஆகி வெற்றி பெற வேண்டும் என்றால், எங்கள் அணியில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்திருந்தால் மட்டும்தான் முடியும். தற்பொழுது பாதி சீசன் மட்டுமே முடிந்திருக்கிறது. மீதம் இருக்கும் 7 போட்டியில் ஐந்து அல்லது ஆறு போட்டிகளை வென்று நாங்கள் பிளே ஆப்க்கு வருவோம்” எனக் கூறியிருக்கிறார்.