டி20 உ.கோ மஞ்ச்ரேக்கரின் இந்திய அணி.. கோலி ஹர்திக் ரிங்கு இடமில்லை.. புதிய வீரர்களுடன் புது அணி

0
149
Virat

ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்குகிறது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் தங்கள் நாட்டு தங்களின் அணிகளை வெளியிட்டுவருகிறார்கள். இந்த வகையில் சஞ்சய் மஞ்ச்ரேகர் தன்னுடைய டி20 உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்திருக்கிறார்.

தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் தேர்வில், யார் துவக்க வீரர்களாக இருப்பார்கள்? விக்கெட் கீப்பர்களாக எந்த இரண்டு பேர் இடம் பெறுவார்கள்? என்பதுதான் தேர்வாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் இது ரசிகர்களுக்கு சுவாரசியமான விஷயமாக அமைகிறது.

- Advertisement -

இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேகர் தன்னுடைய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் விராட் கோலியை நீக்கிவிட்டு, மூன்றாவது இடத்தை சஞ்சு சாம்சனுக்கு கொடுத்திருக்கிறார். மேலும் நான்காவது இடத்தில் வழக்கம் போல் சூரியகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் வருகிறார்கள்.

மேலும் இந்த அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தை கேஎல்.ராகுலை கூடுதலாக எடுத்து அவருக்கு கொடுத்திருக்கிறார். மேலும் பொதுவான ஆல் ரவுண்டர் இடத்தில் ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் க்ருனால் பாண்டியாவையும் வைத்திருக்கிறார். சுழல் பந்துவீச்சு கூட்டணியில் மீண்டும் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாகல் இருவரையும் இணைத்து இருக்கிறார்.

வேகப்பந்துவீச்சாளர்களுக்காக ஐந்து இடங்களை ஒதுக்கி அதில் முதல் இரண்டு இடங்களில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை சேர்த்து இருக்கிறார். மீதி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களாக கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா, லக்னோ அணியின் மயங்க் யாதவ் மற்றும் ராஜஸ்தான் அணியின் ஆவேஷ் கான் ஆகியோர் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்மின்சிடம் மீண்டும் கோலி தோற்றார்.. அவர் மூளைக்கு இவர் கிட்ட பதில் இல்லை – இர்பான் பதான் பேச்சு

சஞ்சய் மஞ்ச்ரேகர் அறிவித்திருக்கும் 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணி:

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, க்ருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாக்ல் பும்ரா, சிராஜ், ஆவேஷ் கான், மயங்க் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா.