அபிஷேக் ஷர்மா அந்த பேப்பரை எப்ப பாக்கெட்ல வச்சாரு?.. எங்க பிளான் இதுதான் – டிராவிஸ் ஹெட் பேட்டி

0
164
Head

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 245 ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது குறித்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பேட்டி அளித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் மோதி கொண்ட போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைப்பதாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மாவுடன் தனது பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய என்ன திட்டம் கொண்டுவரப்பட்டது என்று டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெறும் 12. 2 ஓவர்

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 82 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் இணைந்து 12.2 ஓவரில் 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அந்த இடத்திலேயே போட்டியை அவர்கள் பக்கம் கொண்டு வந்து விட்டார்கள்.

மேலும் நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதம் அடித்து அசத்தினார். 55 பந்துகளை எடுத்துக்கொண்ட அவர் மொத்தம் 141 ரன்கள் குவித்தார். இத்தோடு சதம் அடித்து முடித்ததும் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக் காட்டினார். அதில் இந்த சதம் ஆரஞ்சு ஆர்மிக்கானது என்று எழுதி இருந்தது. தற்போது இது குறித்து டிராவிஸ் ஹெட் பேசியிருக்கிறார்.

- Advertisement -

எப்போது எழுதி வைத்தார்

இது பற்றி டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது “இன்று மோசமாக இல்லை. வெற்றியாளர்கள் பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாங்கள் வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு ஒரு விதிவிலக்கான ஆட்டம் தேவைப்பட்டது. நாங்கள் எங்கள் வழக்கமான வேலையை பாதியிலேயே நிறுத்தி விட்டோம். நாங்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டோம். ஆரம்பத்தில் கொஞ்சம் நாங்கள் பொறுமையாக இருந்தோம்”

இதையும் படிங்க : சதம் அடித்ததும் அந்த பேப்பரை காட்ட இதுவே காரணம்.. கடந்த 4 நாள் அவங்க தான் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க – அபிஷேக் ஷர்மா

“பஞ்சாப் என்ன மாதிரி திட்டங்களை கொண்டு வருகிறது என்று பார்ப்பதற்கு அமைதியாக இருந்தோம். அதற்குப் பிறகு நேரம் ஒதுக்கி நாங்கள் ஒரு பயணத்திற்கு சென்றோம். கடந்த ஆண்டு நாங்கள் சிறப்பான முறையில் இருவருமே விளையாடினோம். நாங்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்து நல்ல முறையில் துவக்கத்தை ஏற்படுத்தினோம். ஆறு போட்டிகளாக இந்த பேப்பரை எழுதி அபிஷேக் சர்மா பாக்கெட்டில் வைத்திருக்கிறார். இந்த முறை அது நடந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -