இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது.
மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது நாளின் ஆரம்பத்தில் கூட இந்திய அணியின் கையே ஓங்கி எடுத்தது. இந்த நிலையில்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
190 ரன்கள் பின்தங்கி இருந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து மேற்கொண்டு இந்தியாவுக்கு 230 ரன்கள் இலக்கு வைக்கும் அளவுக்கு 420 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்தின் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியின் துணை கேப்டன் போப் 196 ரன்கள் எடுத்தார். இவர் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்கூப் என்று ஆபத்தான ஷாட்கள் விளையாடி இங்கிலாந்து அணிக்கு ரன்கள் கொண்டு வந்தார்.
இவர் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்களை சுழற்றியதிலும், கள வியூகங்களை அமைத்ததிலும், அவரை வீழ்த்துவதற்கு புதிய முயற்சிகள் ஏதும் செய்யாததிலும் நிறைய தவறுகள் செய்துவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் அணியில் விராட் கோலி வீரராக இருந்து ரன்கள் அடிக்காமல் இருந்திருந்தால் கூட, அவர் களத்தில் இருப்பது அணியை நம்பிக்கை இழக்காமல் எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கும், இந்திய அணி அந்த டெஸ்ட் போட்டியை தோற்று இருக்காது என்று பலரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியா விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சியை தவறவிடுகிறது. அவர் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் அந்த போட்டியில் இந்தியா தோற்று இருக்காது என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : வீடியோ.. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்.. ரீமேக் செய்த சர்பராஸ் கான் தம்பி முசிர் கான்
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் கேப்டன்சியை அவர்கள் பெரிதும் இழக்கிறார்கள். விராட் கோலி கேப்டனாக அந்த போட்டியில் இருந்திருந்தால் நிச்சயம் அந்த போட்டியில் தோற்று இருக்க மாட்டார்கள்.
ரோகித் ஒரு சிறந்த லெஜெண்ட் வீரர்.ஆனால் அவர் அந்த போட்டியின் போது அவர் முழுவதுமாக நம்பிக்கை இழந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டவர் போல இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.