“அஷ்வின் திரும்பி வந்தால்.. உடனே பந்து வீச அனுமதி கிடைக்குமா?” – தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியான செய்தி

0
1654
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி திடீரென ஆட்டத்திற்குள் புகுந்து இங்கிலாந்து அணியை சரித்து முன்னணியில் இருக்கிறது.

நேற்று 207 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து அணி, இன்று தொடர்ந்து விளையாடி 319 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப மருத்துவ சூழ்நிலையின் காரணமாக அவசரமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையில் இருந்து விலகி சென்னை சென்று விட்டார். இதன் காரணமாக இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இப்படியான நிலையில் இன்று இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை சீக்கிரத்தில் மூன்றாவது நாளில் சுருட்டி மீண்டும் பேட்டிங் செய்ய வந்திருக்கிறார்கள். 126 ரன்கள் முன்னிலையும் கிடைத்திருப்பதால் இந்திய அணி இந்த டெஸ்டில் வெற்றி பெறும் வாய்ப்பில் இருக்கிறது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டிக்கு மீண்டும் திரும்ப வந்தால் அவருக்கு உடனே பந்து வீசுவதற்கான அனுமதி கிடைக்குமா? என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகிறது. ஐந்தாவது நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சுக்கு வருவாரா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

- Advertisement -

ஒரு பந்துவீச்சாளர் களத்திற்கு வெளியே எவ்வளவு நேரம் பந்து வீசாமல் இருக்கிறாரோ, அவ்வளவு நேரம் அவர் மீண்டும் களத்திற்குள் வந்து பந்து வீசாமல் இருக்க வேண்டும். அந்த நேரம் கடந்த பிறகுதான் அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

இதையும் படிங்க : “சர்ப்ராஸ் கானை இரவில் பசியோடு படுக்க வைத்திருக்கிறேன்.. இதுதான் காரணம்” – தந்தை நெகிழ்ச்சியான பேட்டி

இப்படியான நிலையில் இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “நடுவர்கள் அவரை மீண்டும் பந்து வீச உடனே அனுமதிப்பார்கள். ஏனென்றால் அவர் வழக்கமான காரணங்களுக்காக பந்து வீசாமல் வெளியில் செல்லவில்லை. எனவே ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை உணர்ந்து நடுவர்கள் அஸ்வின் வந்தால் உணரையும் பந்து வீச அனுமதி தருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.