“சர்ப்ராஸ் கானை இரவில் பசியோடு படுக்க வைத்திருக்கிறேன்.. இதுதான் காரணம்” – தந்தை நெகிழ்ச்சியான பேட்டி

0
179
Sarfaraz

உள்நாட்டு கிரிக்கெட்டில் டன் கணக்கில் ரன்கள் குவித்து சில வருடங்களாக வாய்ப்புக்கு காத்திருந்து ஏமாந்து, தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பை பெற்று, அதிரடியான ஒரு அரை சதம் அடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்.

இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை கதை இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு கதை. இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவருடைய தந்தைதான் இவருடைய பயிற்சியாளராகவும் இருப்பதுதான்.

- Advertisement -

ஆரம்பத்தில் வறுமையான பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த நவ்ஷாத் கான் தன் மகன்களை இந்திய அணிக்கு எப்படியும் விளையாட வைத்து விட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து போராடி இருக்கிறார்.

இதற்காக ஒரு பயிற்சியாளராக கிரிக்கெட்டை மட்டும் கற்றுக் கொடுக்காமல், தந்தையாக வாழ்க்கையையும் கற்றுக் கொடுப்பதை மிகவும் முக்கியமாக கருதி இருக்கிறார்.

இதற்காக சில நேரங்களில் அவர் தன் மகன்கள் இடம் மிகக் கடுமையாக நடந்து இருக்கிறார். குறிப்பாக சர்பராஸ் கானிடம் சில கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

அவரை பக்குவப்பட்ட ஒரு மனிதனாக, வாழ்க்கையின் கஷ்டங்களை புரிந்து கொண்ட ஒருவராகவும் உருவாக்கவும் அவர் பின்னால் இருந்து நிறைய வேலைகள் செய்திருக்கிறார்.

இதுகுறித்து சர்பராஸ் கான் தந்தை கூறும் பொழுது “நான் சர்பராஸ் கானிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். அவன் சாப்பிடாமல் இரவு உறங்கி இருக்கிறான். இதற்குப் பின்னால் காரணம் இருக்கிறது. நடைபாதையில் உறங்குபவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று செய்தேன்.

எங்களிடம் ஒரு கார் இருந்தது. ஆனாலும் கூட நான் அவனை எப்பொழுதும் ரயில் மற்றும் பேருந்தில்தான் பயணம் செய்ய சொல்வேன். அதன் மூலம்தான் வாழ்க்கையின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியும்.

என்னால் செய்ய முடியாததை அவர் செய்வார் என்று நான் நம்பினேன். எனக்காக விளையாட அவர் தொப்பியை பெற்ற பொழுது நான் பெற்றதாக உணர்ந்தேன். அவர் சிறுவயதில் இருந்தே மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் வளர்ந்தார்.

இதையும் படிங்க : 224/2 to 319 ஆல் அவுட்.. சீறி எழுந்து சிராஜ்.. அடங்கி ஒடுங்கிய இங்கிலாந்து பாஸ்பால்

அவர் ஒருபோதும் சிறுவர்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்தது கிடையாது. அவர் அதிகாலையில் பயிற்சிக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார். ஆனால்மீண்டும் திரும்ப பயிற்சி செய்வார். அவர் இந்திய அணிக்காக விளையாட தொப்பியை பெற்ற பொழுது அதை மிகவும் மதிப்பாக உணர்ந்தார்” என்று கூறியிருக்கிறார்.