பாகிஸ்தானுக்கு எதிரான சதம்.. ஐசிசி தரவரிசையில் கோலி முன்னேற்றம்.. பாபர் அசாம் இடத்திற்கு ஆபத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. இதனை அடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

743 புள்ளிகளை பெற்றுள்ள விராட் கோலி டேரல் மிட்செல்லை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதேபோன்று நம்பர் ஒன் இடத்தில் இருந்த கில், தற்போது தன்னுடைய புள்ளிகளை மேலும் அதிகரித்திருக்கிறார்.

டாப் 5 இடத்தில் 3 இந்தியர்கள்:

சாம்பியன்ஸ் தொடரில் தொடர்ந்து இரண்டு நல்ல இன்னிங்ஸ்களை கில் ஆடிய நிலையில் பாபர் அஸ்ஸாமுக்கு அவருக்கும் உள்ள வித்தியாசம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். ரோகித் சர்மா 757 புள்ளிகளுடன் உள்ள நிலையில், நான்காம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்றிச் கிளாசன் உள்ளார்.

இதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் ஆட்டத்தில் சொதப்பிய டிராவிஸ் ஹெட், ஒரு இடம் சரிந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக விளையாடியதை அடுத்து முதல் ஐந்து இடத்தில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

- Advertisement -


முற்றிலும் மாறிய பட்டியல்:

அதே போன்று பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் சமான் 18-வது இடத்திற்கும், கேப்டன் முகமது ரிஸ்வான் 20 இடத்திற்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கேப்டன் ஸ்மித் நான்கு இடங்கள் சரிந்து 22-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பெண் டக்கட் 27 இடங்கள் முன்னேறி தற்போது 27வது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அணியை நான் உருவாக்குவேன்.. அக்ரம் அக்தர் செய்யறது அசிங்கம் – யுவராஜ் சிங் தந்தை பேட்டி

கே எல் ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி 15 வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் வில் யங் 8 இடம் முன்னேறி 14 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ரச்சின் ரவீந்திரன் 18 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும்,  வில் யங் 12 இடங்கள் முன்னேறி 28 வது இடத்தையும், டாம் லாத்தம் 11 இடங்கள் முன்னேறி தற்போது 31-வது இடத்தில் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உறுதியாக உள்ளது. இதில் இரண்டிலும் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் கூட அவர் பாபர் அசாம் இடத்தை பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by