விராட் கோலி பிளேசிஸ் கிடையாது.. இவரால்தான் ஆர்சிபி அணியை இனி காப்பாற்ற முடியும் – இயான் பிஷப் பேட்டி

0
664
Bishop

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து ஆர்சிபி அணி வெளியேறியது. இந்த நிலையில் 17 வருடமாக கோப்பையை வெல்லாத அந்த அணியை யார் அடுத்து கொண்டு செல்லும் கூடும் என கரீபியன் முன்னாள் வீரர் இயான் பிஷப் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே லெஜன்ட் வீரர் ஆன்டி பிளவர், அந்த அணியில் இருந்து விலகி ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை இந்த வருடம் ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

மேலும் ஆன்டி பிளவர் வந்ததும் மினி ஏலத்தில் வீரர்களை வாங்கியது வரை பெரிய சர்ச்சையாக மாறியது. பெங்களூரு மைதானத்திற்கு ஏற்ற வகையிலான வீரர்களை வாங்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. இதனால் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விமர்சனங்கள் ஆரம்பித்துவிட்டது.

இதற்கு தகுந்தது போல ஆர்சிபி அணி முதல் எட்டு போட்டிகளில் 7போட்டிகளை தோற்றது. ஆர்சிபி அணி சிந்தனைக்குழு ஒன்பதாவது போட்டியில் இருந்து தான் தங்களுக்கு சரியான பிளேயிங் லெவன் எதுவாக இருக்கும் என்பதையே கண்டுபிடித்தார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றையும் அடைந்து தற்போது வெளியேறி விட்டார்கள்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்வது பற்றி பேசி இருக்கும் இயான் பிஷப் கூறும் பொழுது “அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆர்சிபி அணியை யாராவது முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றால், அது அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர்தான்” என்று கூறியிருக்கிறார். பயிற்சியாளர் பொறுப்பில் ஆன்டி பிளவர் மிகவும் சிறந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் ஆர் சி பி அணியில் அவர் சரியான பிளேயிங் லெவனை கண்டுபிடிக்கவே 9 போட்டிகள் ஆனதுதான் தற்பொழுது பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி ஆர்சியை விட்டு உடனே கிளம்புங்க.. நான் சொல்ற இந்த டீம்ல சேருங்க – கெவின் பீட்டர்சன் அதிரடி பேட்டி

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை ஆரம்பத்தில் இருந்து தனியாக தோள்களில் சுமந்தவர் விராட் கோலிதான். தற்போதும் அவர் 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறார். மேலும் கேப்டன் பாஃப் ஐபிஎல் சீசனின் இரண்டாவது பகுதியில் பேட்டிங்கில் சிறந்த துவக்கத்தையும் கேப்டன்ஷியில் சிறந்த முடிவுகளையும் களத்தில் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.