“2015 விராட் கோலி செய்ததை மறக்கவே மாட்டேன்.. அங்கேயே திருப்பி பதிலடி தந்தேன்” – எல்கர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்

0
518
Virat

தற்கால கிரிக்கெட்டில் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கக்கூடிய வீரர் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி.

ஐபிஎல் தொடர் வந்து அதே மாதிரியான தொடர்கள் உலகெங்கும் நடக்க ஆரம்பித்து விட்ட பிறகு, எல்லா அணியின் வீரர்களும் எல்லா அணி வீரர்களோடும் சேர்ந்து விளையாடுகின்ற சூழல் நிறைய உருவாகிவிட்டது.

- Advertisement -

இதன் காரணமாக வீரர்கள் இடையே நல்ல நட்பு உருவாகி வருகிறது. இதனால் முன்பு போல களத்தில் வீரர்கள் தங்களது ஆக்ரோஷத்தை, மற்ற வீரர்களைச் சீண்டுவதை செய்வதில்லை.

இன்னும் ஒரு படி மேலே போய் சில வீரர்கள் தங்கள் அணிக்கு விளையாட வாய்ப்பு இருப்பதாக கருதினால் கூட, அவர்களிடம் நாளை பேச வேண்டுமே என்று சீண்டுவதில்லை.

ஆனால் விராட் கோலி ஒரு கட்டத்துக்கு மேல் அவரது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். பஞ்சாப் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அவர் பேட்டிங்கில் ஒரு சிக்ஸர் அடித்து விட, அடுத்த பந்தில் விராட் கோலி அவரை கேட்ச் பிடித்து விட்டு களத்தில் ஆக்ரோஷமாக பேசியது பரபரப்பானதாக இருந்தது.

- Advertisement -

இப்படி விராட் கோலி களத்தில் சக இந்திய அணி வீரர்களிடம் கூட ஐபிஎல் தொடரில் ஏதாவது வார்த்தை போரில் ஆக்ரோஷமாக ஈடுபட்டு விடுவார். கம்பீர உடன் நடந்ததெல்லாம் ஐபிஎல் அழிந்தாலும் அழியாதது. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அந்தச் சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கரை கடுமையாக விராட் கோலி சீண்டியிருக்கிறார். அதை தற்போது நினைவு கூர்ந்து பேசியுள்ள டீன் ஏல்கர் நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது நகைச்சுவையான ஒன்றாக இருந்தது. நான் அப்பொழுது பேட்டிங் செய்ய வந்தேன். அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக மட்டுமல்ல விராட் கோலிக்கு எதிராகவும் நான் விளையாட வேண்டியதாக இருந்தது. அவர் என் மீது துப்புவதற்கு விருப்பப்படுபவர் போல இருந்தார்.

நான் திருப்பி அவரிடம் பதிலுக்கு ‘ நீங்கள் இதைச் செய்தால், நான் திருப்பி உங்களுக்கு பேட்டால் பதிலடி தருவேன்’ என்று கூறினேன்.

இதையும் படிங்க : “2வது டெஸ்டில் இந்த இந்திய வீரரை விளையாட வைக்காதிங்க.. புது பேட்ஸ்மேன் வரட்டும்” – பார்த்தீவ் படேல் அதிரடி கருத்து

நான் என்னுடைய நாட்டு வட்டார வழக்கில் பேசியது அவருக்கு புரிந்து இருந்தது. ஏனென்றால் அவர் டிவிலியர்ஸ் உடன் விளையாடிய வருகிறார்.

எனவே அவர் நான் கூறியதை புரிந்து கொண்டார். உடனே அதற்கு அவர் ‘ நீ அப்படி செய்தால் உன்னை இதே மைதானத்தில் நான் நாக் அவுட் செய்வேன்’ என்றார். என்னதான் இருந்தாலும் நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டியதாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.