இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை மட்டும் இல்லாமல் போட்டியையும் வெல்ல முடியாது என்று பலராலும் சொல்லப்பட்டதை, எடுத்ததும் இங்கிலாந்து அணி உடைத்திருக்கிறது.
நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் கொண்டு வந்தது.
மேலும் சாதனை வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இருக்கும் பொழுது, அவருக்கு பதிலாக மிக தைரியமாக அதிவேகமாக பந்து வீசும் மார்க் வுட்டை கொண்டு வந்தது. போட்டி துவங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே பிளேயிங் லெவனை வெளியிட்டது.
மார்க் வுட் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற வில்லை. மொத்தமாக சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணியின் எல்லா விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்திய அணியில் பும்ரா ஆறு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஆனாலும் இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்திய அணியின் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 11 ஓவர்கள் மட்டுமே பதிவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் செயல் திட்டத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என்பதாக, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் போதும் என்பதில் சந்தேகம் கிடையாது.ஆனால் எனக்கு இதில் ஒரு வித்தியாசமான பார்வை இருக்கிறது. டெஸ்ட் போட்டி முழுவதும் முகமது சிராஜை ஒரு பத்து ஓவர்களுக்குதான் பயன்படுத்தி இருக்கிறீர்கள். அக்சர் படேல் அவரது பேட்டிங் திறமை காரணமாக குல்தீப் யாதவை வெளியில் வைத்து உள்ளே இருக்கிறார். வெரைட்டி தேவைப்பட்டால் அக்சரை வெளியில் வைத்து குல்தீபுக்கு வாய்ப்பு தருவோம் என்று ரோகித் கூறி இருந்தார்.
இதையும் படிங்க : “அடுத்த டெஸ்டுக்கு இன்னும் மோசமான பிட்ச்?.. நான் சொல்றதை இந்திய அணி கேட்கலை” – வாகன் மீண்டும் தாக்கு
நீங்கள் சிராஜை அதிகம் பயன்படுத்தவில்லை என்றால், கூடுதலாக ஒரு முழுமையான பேட்ஸ்மேனை ஏன் விளையாடக் கூடாது. அஸ்வின், ஜடேஜா, குல்திப் என மூன்று வெரைட்டியான சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். மேலும் பேட்டிங் நீளத்தையும் அதிகரிக்கலாம். நீங்கள் அவருக்கு ஏழு முதல் 10 ஓவர்தான் தருவீர்கள் என்றால் சிராஜை விளையாட வைப்பதில் அர்த்தம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.