“சதம் அடிச்சேன்தான்.. ஆனாலும் தப்பு பண்ணிட்டேன்.. அப்பாவால எதுவுமில்ல” – சுப்மன் கில் பேச்சு

0
257
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவுக்கு வந்திருக்கிறது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு தற்பொழுது 399 ரன்கள் இலக்கு கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மேற்கொண்டு இன்றைய நாளில் 14 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்திருக்கிறது. பென் டக்கெட் 28 ரன்கள் எடுத்து வெளியேறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு மொத்தமாக 332 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படுகிறது. அந்த அணியின் கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருக்கிறது. ஆடுகளத்தின் தற்பொழுது சுழல் பந்துவீச்சுக்கு பெரிய சாதகம் கிடையாது.

ஆனாலும் ஆடுகளத்தில் சில பந்துகள் குறைவாக பவுன்ஸ் ஆகின்றன. மேலும் காலை நேரத்தில் ஈரப்பதம் இருக்கும் பொழுது வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகமான நிலைமை காணப்படுகிறது. மேலும் கொஞ்சம் தேய்ந்த பந்தில் பும்ரா ரிவர்ஸ் ஸ்விங்கில் சிறப்பாக இருக்கிறார். இதன் காரணமாக இந்திய தரப்பு கொஞ்சம் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

- Advertisement -

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக பேட்டிங்கில் மிகவும் மோசமாக இருந்து வந்த கில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து மீண்டிருக்கிறார். ஆனாலும் இந்திய அணி நிமிரும் நேரத்தில் எல்லாம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. இந்த வகையில் தவறான நேரத்தில் கில்லும் விழுந்தார். மேலும் அவரது தந்தை போட்டியை காண வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்ட நாள் முடிவுக்கு பின் பேசிய கில் கூறும்பொழுது “சதம் அடித்தது நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் நான் தேநீர் இடைவேளை தாண்டி ஐந்தாறு ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். பாயிண்ட் ஃபீல்டர் நகர்ந்து சென்ற காரணத்தினால், அந்தப் பகுதியில் ஷாட் விளையாட நினைத்து ஆட்டம் இழந்து விட்டேன்.

எனக்கு நடுவர் முதலில் அவுட் கொடுத்த பொழுது, ஸ்ரேயாஸ் ஐயர்தான் ரிவ்யூ எடுக்கச் சொன்னார். எனக்கு அது குறித்து எதுவும் யோசனை அப்பொழுது இல்லை.

இது பேட்டிங் செய்வதற்கு நல்ல விக்கெட். ஆனால் ரன்கள் மிகச் சுலபமாக அடிக்க முடிந்த விக்கெட் கிடையாது. சில பந்துகள் பவுன்ஸ் ஆவதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. மேலும் ஒரு சில பந்துகள் திரும்பவும் செய்கின்றன. எனவே நாம்தான் பார்த்து விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும்.

எனது தந்தை என்னுடைய போட்டிகளை காண நிறைய முறை வந்திருக்கிறார். அவர் வந்ததால் எந்த எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. நான் அவருக்காக அப்படி ஒரு ஷாட் விளையாடச் செல்லவில்லை.

இதையும் படிங்க : 332 ரன்.. 9 விக்கெட்டுகள்.. அஸ்வின் தந்த தொடக்கம்.. இந்தியாவா? இங்கிலாந்தா?.. திரில் போட்டி

இப்போதைக்கு 70-30 என்று இருக்கிறது. நாளை காலை முதல் செஷன் முக்கியமானது. காலையில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக உதவிகள் இருப்பதை பார்த்திருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.