332 ரன்.. 9 விக்கெட்டுகள்.. அஸ்வின் தந்த தொடக்கம்.. இந்தியாவா? இங்கிலாந்தா?.. திரில் போட்டி

0
390
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் விளையாடி வருகின்றன.

இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சேர்த்தது. பேட்டிங்கில் மற்ற யாரும் பெரிதாக இந்திய அணிக்கு ரன்கள் கொண்டு வரவில்லை.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணியை பும்ரா சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆறு விக்கெட் கைப்பற்றி கட்டுப்படுத்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்தது.

143 ரன்கள் முன்னிலை உடன் வலிமையாக களம் இறங்கிய இந்திய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியது. சுப்மன் கில் மட்டும் அதிரடியாக விளையாடி 110 ரன்கள் எடுக்க இந்திய அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 399 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய மண்ணில் இதுவரை 387 ரன்களை துரத்தியதே அதிகபட்ச ரன் துரத்தலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கிறது.

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி வழக்கம்போல் அதிரடியான முறையில் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. இந்த நிலையில் இங்கிலாந்து 50 ரன்கள் எடுத்திருந்த பொழுது, அந்த அணியின் பென் டக்கெட் விக்கெட்டை கே எஸ் பரத் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். அவர் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : AUSvsWI.. கேப்டனாக மீண்டும் ஸ்மித் அசத்தல்.. முன்னேறி வரும் வெஸ்ட் இண்டீஸ்.. போட்டி முடிவு

இன்றைய நாளில் 14 ஓவர்களில் இங்கிலாந்து அணி 67 ரன்கள் எடுத்திருக்கிறது. மேற்கொண்டு வெற்றிக்கு 332 ரன்கள் தேவைப்படும் நிலையில் 9 விக்கெட்டுகள் இங்கிலாந்து கைவசம் இருக்கிறது. ஜாக் க்ரவுலி 29, நைட் வாட்ச்மேன் ரேகா அஹமத் 9 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். பரபரப்பான கட்டத்தில் இரண்டாவது டெஸ்ட் நகர்ந்திருக்கிறது.